Automobile Tamilan

புதிய வசதிகளுடன் 2025 பஜாஜ் டோமினார் 400, டோமினார் 250 டீசர் வெளியானது

Bajaj Dominar teased

2025 ஆம் ஆண்டிற்கான பஜாஜ் ஆட்டோவின் டோமினார் 400 மற்றும் டோமினார் 250 என இரண்டின் மேம்பட்ட மாடல்கள் அடுத்த சில நாட்களுக்குள் அதிகாரப்பூர்வ விலை அறிவிப்பு வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

சமீபத்தில் வெளியான பல்சர் என்எஸ் 400 மாடலின் எஞ்சின் உட்பட பெரும்பாலான வசதிகளை பகிர்ந்து கொள்ள உள்ளது. குறிப்பாக, எல்சிடி டிஸ்பிளே கிளஸ்ட்டர் உடன் புதுப்பிக்கப்பட்ட கனெக்ட்டிவிட்டி சார்ந்த அம்சங்கள் பெற்றிருக்கலாம். குறிப்பாக, தற்பொழுது பெட்ரோல் டேங்கில் உள்ள கிளஸ்ட்டர் அமைப்பு நீக்கப்படலாம்.

மற்றபடி மெக்கானிக்கல் சார்ந்த அம்சங்களில் எந்த மாற்றமும் இருக்காது. தொடர்ந்து டோமினார் 400 பைக்கில்  43mm விட்டம் பெற்ற யூ.எஸ்.டி டெலிஸ்கோபிக் ஃபோர்க் பெற்றதாக 135 மிமீ பயணிக்கும் திறனை பெற்றுள்ளது. பின்புறத்தில் நைட்ரக்ஸ் மோனோ ஷாக் அப்சார்பர் பெற்றிருக்கலாம்.

டோமினார் 250 பைக்கின் விலை ரூ.2 லட்சத்துக்குள் அமையலாம், அடுத்து, டோமினார் 400 பைக்கின் விலை ரூ.2.45 லட்சத்துக்குள் அமையலாம்.

Exit mobile version