OBD-2B அப்டேட் பெற்ற 2025 ஹீரோ ஸ்ப்ளெண்டர் பிளஸ் வரிசை விற்பனைக்கு வந்தது

obd 2b hero splendor updated

இந்தியாவில் அதிகம் விற்பனையாகின்ற பிரபலமான ஹீரோ ஸ்ப்ளெண்டர்+, ஸ்ப்ளெண்டர்+ Xtec, ஸ்ப்ளெண்டர்+ Xtec 2.0 என மூன்று பைக்கில் OBD-2B மேம்பாட்டை பெற்ற எஞ்சினுடன் சிறிய அளவிலான புதுப்பிக்கப்பட்ட பாடி கிராபிக்ஸ் மற்றும் வேரியண்டுகளிலும் வசதிகளிலும் எந்த மாற்றமும் இல்லை.

தொடர்ந்த மூன்று ஸ்பிளெண்டர் பிளஸ் பைக்குகளில் 97.2cc சிங்கிள் சிலிண்டர் எஞ்சின் அதிகபட்சமாக 7.91 bhp பவர் மற்றும் 8.05 Nm டார்க் வழங்கின்ற நிலையில் 4 வேக கியர்பாக்ஸ் பெற்றுள்ளது.

டிரம் பிரேக் மற்றும் டிஸ்க் பிரேக் ஆப்ஷனுடன் கிடைக்கின்ற ஸ்ப்ளெண்டர் பிளஸ் 100 சிசி பைக்கில் டெலிஸ்கோபிக் போர்க் மற்றும் பின்புறத்தில் ட்வீன் ஷாக் அப்சார்பரை பெற்றுள்ளது.

Xtec வேரியண்டில் டிஜிட்டல் கிளஸ்ட்டரை பெற்று ஸ்மார்ட்போன் கனெக்ட்டிவிட்டி வசதிகள் கொடுக்கப்பட்டுள்ளது. XTec 2.0 வேரியண்டில் எல்இடி ஹெட்லைட் மற்றும் எல்இடி டெயில்லைட் ஐ3எஸ் உடன் செல்ஃப்-ஸ்டார்ட் போன்றவை எல்லாம் பெற்றுள்ளது.

(எக்ஸ்-ஷோரூம் தமிழ்நாடு)

OBD2B மாடல் முந்தைய மாடலை விட ரூ.1,800 முதல் ரூ.2,500 வரை விலை உயர்த்தப்பட்டுள்ளது.

Exit mobile version