Automobile Tamilan

2025 ஹோண்டா CB350RS பைக்கில் OBD-2B அப்டேட் வெளியானது

2025 honda cb350rs

ஹைனெஸ் சிபி 350 மாடலில் இருந்து மாறுபட்ட ஸ்போர்ட்டிவ் டிசைனை பெற்ற ஹோண்டாவின் CB350RS மாடலில் 2025 ஆம் ஆண்டிற்கான புதிய நிறங்களுடன் கூடுதலாக OBD-2B மேம்பாட்டினை பெற்ற எஞ்சினை பெற்று ரூ.2.16 லட்சம் முதல் ரூ.2.20 லட்சம் வரை (எக்ஸ்ஷோரூம்) விலை அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து முந்தைய மாடலில் இடம்பெற்றுள்ள அடிப்படையான டிசைனில் எந்த மாற்றமும் இல்லாமல், டிஜிட்டல் அனலாக் முறையிலான கிளஸ்ட்டரில் ப்ளூடுத் கனெக்ட்டிவிட்டி வசதியுடன், முன்புறத்தில் 19 அங்குல வீல், பின்புறத்தில் 17 அங்குல வீல் உடன் இரு பக்க டயர்களிலும் டிஸ்க் பிரேக்கினை பெற்று டூயல் சேனல் ஏபிஎஸ் கொண்டதாக அமைந்துள்ளது.

348.36cc லாங் ஸ்ட்ரோக் சிங்கிள் சிலிண்டர் ஏர் கூல்டு எஞ்சின் அதிகபட்சமாக 5500 RPM-ல் 20.8 bhp பவர் மற்றும் 3000 RPM-ல் 30Nm டார்க் வெளிப்படுத்துகின்ற நிலையில் 5 வேக கியர்பாக்ஸ் உடன் அசிஸ்ட் சிலிப்பர் கிளட்ச் உள்ளது.

முந்தைய மாடலில் இருந்து சற்று மாறுபட்ட பாடி கிராபிக்ஸ் கொண்ட நிறங்களை பெற்றதாக அமைந்துள்ள டாப் வேரியண்டில் தற்பொழுது சிவப்பு, கிரே மெட்டாலிக், கருப்பு உடன் மஞ்சள், மற்றும் கிரவுண்ட் கிரே போன்ற நிறங்களை கொண்டுள்ளது. மேலும் இந்த மாடலுக்கு பல்வேறு கஸ்டமைஸ் கிட் ஆப்ஷனும் உள்ளது.

2025 Honda CB350RS Price list

(EX-Showroom)

Exit mobile version