Automobile Tamilan

2025 சுசூகி ஜிக்ஸர், ஜிக்ஸர் SF விற்பனைக்கு வெளியானது.!

சுசூகி ஜிக்ஸர் sf 155

OBD-2B ஆதரவினை பெற்ற 2025 ஆம் ஆண்டிற்கான சுசூகி ஜிக்ஸர் மற்றும் ஃபேரிங் ரக ஜிக்ஸர் SF என இரண்டும் விற்பனைக்கு வெளியாகியுள்ள நிலையில் விலை ரூ.1.38 லட்சம் முதல் ரூ.1.47 லட்சம் வரை அமைந்துள்ளது. குறிப்பாக 2025 மாடலில் பெரிய டிசைன் மற்றும் மெக்கானிக்கல் மாற்றங்கள் இல்லை ஆனால் புதுப்பிக்கப்பட்ட நிறங்களை பெற்றுள்ளது.

சுஸுகி ஈக்கோ பெர்ஃபாமென்ஸ் (SEP) தொழில்நுட்பம் கொண்டு OBD-2B இணக்கமான 155cc எஞ்சின் மூலம் 8,000 rpm-ல் அதிகபட்சமாக 13.5 bhp பவர் மற்றும் 6,000 rpm-ல் 13.8 Nm டார்க்  வெளிப்படுத்துகிறது.

டிரைடன் ப்ளூ/பேர்ல் கிளேசியர் ஒயிட், கிளாஸ் ஸ்பார்க்கிள் பிளாக், மற்றும் மெட்டாலிக் ஊர்ட் கிரே/மெட்டாலிக் லஷ் கிரீன் என மூன்று விதமான நிறங்களை பெற்று 17 அங்குல வீல் பெற்று இரு பக்க டயரிலும் டிஸ்க் பிரேக்குடன் சிங்கிள் சேனல் ஏபிஎஸ் கொண்டுள்ள இந்த பைக்கில் டெலிஸ்கோபிக் ஃபோர்க் மற்றும் மோனோஷாக் கொண்டுள்ளது.

இதுதவிர இந்நிறுவனம், சுசூகி ஜிக்ஸர் 250 மற்றும் ஜிக்ஸர் SF 250, V-Strom SX அட்வென்ச்சர் மாடலையும் புதுப்பித்துள்ளது.

Exit mobile version