Automobile Tamilan

2025 டிரையம்ப் ஸ்பீடு ட்வீன் 1200 & 1200 RS விற்பனைக்கு வெளியானது.!

டிரையம்ப் ஸ்பீடு ட்வீன் 1200

இந்தியாவில் டிரையம்ப் மோட்டார்சைக்கிள் நிறுவனம் 2025 ஆம் ஆண்டிற்கான ஸ்பீடு ட்வீன் 1200 மற்றும் 1200 RS விலை ரூ.12.75 லட்சம் முதல் ரூ.15.49 லட்சம் வரை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.  1,200cc பேரல்ல் ட்வீன் எஞ்சின் அதிகபட்சமாக 103.5bhp பவரை 7,750rpm-லும் மற்றும் 112Nm டார்க் ஆனது 4,250rpm-ல் வெளிப்படுத்துகின்றது. இதில் 6 வேக கியர்பாக்ஸ் உடன் சிலிப்பர் அசிஸ்ட் கிளட்ச் உள்ளது.

Triumph Speed Twin 1200

வெள்ளை, சிவப்பு மற்றும் சில்வர் என மூன்று நிறங்களை பெறுகின்ற ஸ்பீடு ட்வீன் 1200 மாடலில் முன்பக்கத்தில் 43மிமீ அட்ஜஸ்டபிள் இல்லாத மார்சோச்சி அப்சைடு டவுன் ஃபோர்க்குகள், ப்ரீலோட்-அட்ஜஸ்டபிள் ட்வின் ஷாக் அப்சார்பர்கள் பின்புறத்திலும் உள்ளது. பிரேக்கிங் அமைப்பில் முன்புறத்தில் 320மிமீ ட்வின் டிஸ்க்குகள் மற்றும் பின்புறத்தில் ஒரு ஒற்றை ரோட்டர் 220மிமீ டிஸ்க் பிரேக் உள்ளது. இந்த பைக்கில் மெட்ஸெலர் ஸ்போர்டெக் M9RR டயர்களை பெற்றுள்ளது.

Triumph Speed Twin 1200 RS

முழுமையாக அட்ஜெஸ்ட் செய்யக்கூடிய மார்சோச்சி அப்சைடு டவுன் ஃபோர்க்குகள், ப்ரீலோட்-அட்ஜஸ்டபிள் ட்வின் ஷாக் அப்சார்பர்கள் பின்புறத்திலும் உள்ளது. பிரேக்கிங் அமைப்பில் முன்புறத்தில் 320மிமீ ட்வின் டிஸ்க்குகள் மற்றும் பின்புறத்தில் ஒரு ஒற்றை ரோட்டர் டிஸ்க் பிரேக் உள்ளது. இந்த பைக்கில் மெட்ஸெலர் ஸ்போர்டெக் M9RR டயர்களை பெற்றுள்ளது.

ஆரஞ்சு, கருப்பு என இரு நிறங்களை பெற்று 6 வேக கியர்பாக்ஸூடன் க்விக் ஷிவிஃப்டர் பெற்று முழுமையான எல்இடி ஹெட்லைட் பெற்றுள்ளது.

இரு மாடல்களிலும் பொதுவாக மல்டிஃபங்க்ஷன் TFT உடன் கூடிய LCD கிளஸ்ட்டர் கனெக்ட்டிவிட்டி வசதியுடன் டர்ன்-பை-டர்ன் நேவிகேஷன் மற்றும் USB-C சார்ஜிங் சாக்கெட் ஆகியவற்றையும் கொண்டுள்ளது.

 

Exit mobile version