Automobile Tamilan

₹ 19.39 லட்சத்தில் புதிய டிரையம்ப் டைகர் 1200 விற்பனைக்கு வெளியானது

2025 Triumph tiger 1200

இந்தியாவில் டிரையம்ப் மோட்டார் சைக்கிள் நிறுவனம் புதிதான மேம்படுத்தப்பட்ட டைகர் 1200 மாடல் விற்பனைக்கு ரூபாய் 19.39 லட்சம் முதல் ரூபாய் 21.28 லட்சம் வரை வெளியிட்டுள்ளது. முந்தைய மாடலை விட சிறப்பான வகையில் அதிர்வுகள் குறைந்த என்ஜின் மற்றும் அமரும் இருக்கைகள் போன்றவை எல்லாம் மேம்படுத்தப்பட்டதாக உள்ளது.

1,160cc இன்ஜின் தொடர்ந்து 9,000rpm-ல் 150hp பவர் மற்றும் 7,000rpm-ல் 130Nm வரை டார்க் உற்பத்தி செய்கிறது, ஆனால் இந்த முறை உள்ளிருக்கும் எஞ்சின் பாகங்களான கிரான்க்ஸாஃப்ட், ஆல்டர்னேட்டர் மற்றும் பேலன்சர் ஷாஃப்ட் ஆகியவற்றில் மாற்றங்களை பெறுகிறது. புதிய மாடலை விட கிளட்ச் மிக இலகுவாக மாற்றும் வகையில் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.

வண்டி நிறுத்தும் பொழுதும் இலகுவாக கிரவுண்ட் கிளியரன்ஸை கையாளும் வகையில் சஸ்பென்ஷன் அமைப்பு மாற்றப்பட்டுள்ளது மேலும், ஃபுட்பெக் நிலையை மாற்றுவதன் மூலம் ஜிடி ப்ரோ மற்றும் ஜிடி எக்ஸ்ப்ளோரரில் கிரவுண்ட் கிளியரன்ஸ் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனால் கார்னரின் செய்யும்பொழுது மிக இலகுவாக பைக்கினை இயக்கும் வகையில் இது உதவும் என நம்புகிறேன்.

IMU-அடிப்படையிலான கார்னரிங் டிராக்ஷன் கண்ட்ரோல், ஆறு ரைடிங் மோடுகள், கீலெஸ் இக்னிஷன் சிஸ்டம், அடாப்டிவ் கார்னரிங் விளக்குகள் மற்றும் புளூடூத் இணைப்புடன் ஏழு அங்குல TFT கிளஸ்ட்டர், ட்ரையம்ப், எக்ஸ்ப்ளோரர் மாடல்களில் சூடான கிரிப்கள் மற்றும் இருக்கைகள் மற்றும் TPMS ஆகியவற்றை வழங்குகிறது.

(Ex-showroom)

 

Exit mobile version