Automobile Tamilan

2025 டிவிஎஸ் அப்பாச்சி RTR 200 4V விற்பனைக்கு அறிமுகமானது

டிவிஎஸ் அப்பாச்சி RTR 200 4V

டிவிஎஸ் மோட்டாரின் 2025 ஆம் ஆண்டிற்கான OBD2B ஆதரவினை பெற்ற அப்பாச்சி RTR 200 4V விலை ரூ. 1,53,990 எக்ஸ்ஷோரூம் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மேலும் அப்பாச்சி பிராண்டினை டிவிஎஸ் வெளியிட்டு வெற்றிகரமாக 20 ஆண்டுகளை கடந்து சுமார் 60 லட்சம் பைக்குகளுக்கு கூடுதலாக விற்றுள்ளது.

அப்பாச்சி ஆர்டிஆர் 200 4வி பைக்கில் தொடர்ந்து புதிய மாசு விதிகளுக்கு உட்பட்ட ஓபிடி-2பி ஆதரவுடன் கூடிய 9,000 rpm-ல் 20.8 PS பவர் மற்றும் 7,250 rpm-ல் 17.25 Nm டார்க் வெளிப்படுத்துகின்ற 200சிசி எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது.

மற்றபடி, 2025 மாடலில் முக்கிய மாற்றங்களாக முன்புறத்தில் கோல்டன் நிற 37மிமீ அப்சைட் டவுன் சஸ்பென்ஷன்,  ஹைட்ரோஃபார்ம் செய்யப்பட்ட ஹேண்டில்பார், ரெட் அலாய் வீலுடன் வந்துள்ள 2025 மாடலில் தற்பொழுது கிளாஸி பிளாக், மேட் பிளாக், மற்றும் கிரானைட் கிரே ஆகிய மூன்று நிறங்களை பெற்றதாக கிடைக்கின்றது.

ஆர்டிஆர் 200 4வி மாடலில் அர்பன், ஸ்போர்ட் மற்றும் ரெயின் என மூன்று விதமான ரைடிங் மோடுகள் இடம்பெற்று டூயல் சேனல் ஏபிஎஸ் உடன்  270mm டிஸ்க் பிரேக் மற்றும் பின்புறத்தில் மோனோ ஷாக் அப்சார்பர் இணைக்கப்பட்டு 240mm டிஸ்க் இணைக்கப்பட்டுள்ளது.

ஆப்பிள் ஐஓஎஸ் மற்றும் ஆண்ட்ராய்டு பயனர்களுக்கு டிவிஎஸ் SmartXonnect ஆப் மூலம் இணைத்துக் கொள்ளுவதன் மூலம் குறுஞ்செய்தி, அழைப்புகள் போன்ற அறிவிப்புகள், ஓவர் ஸ்பீடு அலெர்ட், டீரிப் மீட்டர், பார்க்கிங் இருப்பிடம், டர்ன் பை டர்ன் நேவிகேஷன் கிராஸ் அலெர்ட் மற்றும் அதிகபட்ச வேகத்தை பதிவு செய்வதுடன் ஹெல்மெட் ரிமைன்டரை கொண்டுள்ளது.

 

Exit mobile version