2018 ஆம் ஆண்டின் சிறந்த பைக் பட்டியல்

ஆட்டோமொபைல் சந்தை பல்வேறு மாற்றங்களை பெற்று வரும் நிலையில், 2018 ஆம் ஆண்டில் வெளியான சிறந்த பைக் எது என்பதனை தொடர்ந்து அறிந்து கொள்ளலாம். இந்த பைக் பட்டியல் ஆட்டோமொபைல் தமிழன் தளத்தின் வாசகர்களை கவர்ந்தவையை அடிப்படையாக கொண்டதாகும்.

ஜாவா பைக்

22 ஆண்டுகளுக்கு பிறகு மஹிந்திரா நிறுவனத்தின் வாயிலாக ஜாவா மோட்டார்சைக்கிள் நிறுவனத்தின் ஜாவா, ஜாவா 42 என இரு மாடல்களுடன் ஜாவா பெராக் என மொத்தம் மூன்று மாடல்களை காட்சிப்படுத்தியதை தொடர்ந்து ஜாவா, ஜாவா 42 என இரண்டும் சிங்கிள் சேனல் ஏபிஎஸ், டூயல் ஏனல் ஏபிஎஸ் வசதியுடன் இரட்டை  புகைப்போக்கி குழல் பெற்ற 293 சிசி ஒற்றை சிலிண்டர் அமைப்புடைய லிக்யூடு கூல்டு DOHC பயன்படுத்தப்பட்டுள்ள என்ஜின் அதிகபட்சமாக 27 bhp பவரையும், 28 NM டார்க் திறனையும் வெளிப்படுத்தும். இந்த ஜாவா எஞ்சின் பாரத் ஸ்டேஜ் -6 மாசு உமிழ்வு தரத்திற்கு இணையானது.

ஜாவா மோட்டார்சைக்கிள் விலை பட்டியல்

ஜாவா – ரூ. 1.64 லட்சம்

ஜாவா – ரூ. 1.73 லட்சம் (Dual Channel ABS)

ஜாவா ஃபார்ட்டி டூ – ரூ. 1.55 லட்சம்

ஜாவா ஃபார்ட்டி டூ – ரூ. 1.64 லட்சம் (Dual Channel ABS)

(டெல்லி விற்பனையக விலை)

ராயல் என்ஃபீல்ட் இன்டர்செப்டார் 650

இந்திய ஆட்டோமொபைல் சந்தையின் 2019 ஆம் ஆண்டின் சிறந்த பைக் விருதினை வென்ற ராயல் என்ஃபீல்ட் இன்டர்செப்டார் 650 , இந்தியா உட்பட சர்வதேச அளவில் என்ஃபீல்ட் நிறுவனத்தை அடுத்த அடியை எடுத்த வைக்க உதவியுள்ளது.

கான்டினென்டினல் ஜிடி மற்றும் இன்டர்செப்டார் மாடல்களில் 648சிசி எஞ்சின் அதிகபட்சமாக 47 ஹெச்பி குதிரை திறன் ஆற்றலை வெளிப்படுத்த அதிகபட்சமாக 7100 ஆர்பிஎம் சுழற்சியில் வழங்குவதுடன், குறைந்தபட்ச 4000 ஆர்பிஎம் சுழற்சியில் அதிகப்படியான 52Nm டார்க்கினை வழங்குகின்றது. இதில் 6 வேக கியர்பாக்ஸ் இடம்பெற்றிருப்பதுடன் சிலிப் அசிஸ்ட் கிளட்ச் இணைக்கப்பட்டுள்ளது.

ராயல் என்ஃபீல்ட் இன்டர்செப்டார் 650 விலை விபரம்

கஸ்டம் இன்டர்செப்டார் 650 – ரூ. 2.57 லட்சம்

க்ரோம் இன்டர்செப்டார் 650 – ரூ. 2.70 லட்சம்

(இந்திய எக்ஸ்ஷோரூம் விலை)

யமஹா YZF-R15 Version 3.0

இந்திய யமஹா மோட்டார்சைக்கிள் நிறுவனத்தின் மூன்றாம் தலைமுறை யமஹா ஆர்15 வெர்ஷன் 3.0 அதிகப்படியான நவீன வசதிகளை பெற்ற ஸ்டைலிஷான ஃபுல் ஃபேரிங் ஸ்போர்ட்டிவ் மாடலாக விளங்குகின்றது.

ஆர்15 பைக்கில் 155cc திறனுடைய, லிக்யுட்-கூல்டு, 4-ஸ்ட்ரோக் எரிபொருள் இன்ஜெக்ஷடாட் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்பத்துடன், மாறும் வால்வு இயக்கம் மற்றும் அசிஸ்ட் மற்றும் ஸ்லிப்பர் கிளட்ச் போன்றவற்றையும் கொண்டுள்ளது.

யமஹா R15 வெர்சன் 3.0 பைக் விலை ரூ. 1.27 லட்சம்.

டிவிஎஸ் அப்பாச்சி RTR 160 4V

சிறந்த பைக் பட்டியலில் 5 வது இடத்தில் டிவிஎஸ் மோட்டார் கம்பெனியின் பிரசத்தி பெற்ற அப்பாச்சி RTR பைக் வரிசையில் இடம்பெற்றுள்ள 160 சிசி என்ஜின் மெற்ற அப்பாச்சி RTR 160 பைக்கில் பல்வேறு புதிய மாற்றங்களுடன் நேர்த்தியான பெட்ரோல் டேங்க் ஸ்டைலிஷான தோற்ற அமைப்பில் கார்புரேட்டர், எஃப்ஐ என இரு தேர்வுகளுடன் டிஸ்க் மற்றும் டிரம் பிரேக் ஆப்ஷனில் கிடைக்கின்றது.

16.6 பிஹெச்பி (16.3 கார்புரேட்டர்) பவரை வெளிப்படுத்தும் 160 சிசி என்ஜின் அதிகபட்மாக 14.8 என்எம் டார்க்கினை வழங்குகின்றது. இதில் 5 வேக கியர்பாக்ஸ் உடன் A-RT சிலிப்பர் கிளட்ச் இடம்பெற்றுள்ளது.

டிவிஎஸ் அப்பாச்சி RTR 160 4V பைக் விலை ரூ. 81,490 (ஆரம்ப எக்ஸ்ஷோரூம் விலை)

பிஎம்டபிள்யூ G310R மற்றும் G310GS

டிவிஎஸ் மற்றும் பிஎம்டபிள்யூ மோட்டார்டு கூட்டணியில் உருவான பிஎம்டபிள்யூ G310R மற்றும் G310GS பைக்குகள் இந்திய சந்தையில் விற்பனைக்கு பிரிமியம் விலையில் மிகவும் சிறப்பான ரேசிங் மற்றும் ஆஃப் ரோடு அனுபவத்தை பெறும் வகையில் விற்பனை செய்யப்படுகின்றது.

அதிகபட்சமாக 34 hp ஆற்றலை வெளிப்படுத்தும் திரவத்தால் குளிர்விக்கப்படும் 313 சிசி ஒற்றை சிலிண்டர் என்ஜின் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதன் இழுவைத் திறன் 28Nm பெற்றுள்ளது. இதில் 6 வேக கியர்பாக்ஸ் இடம்பெற்றுள்ளது.

பிஎம்டபிள்யூ G310R ரூ. 2.99 லட்சம்

பிஎம்டபிள்யூ  G310GS ரூ. 3.49 லட்சம்

(எக்ஸ்ஷோரூம்)

ஹீரோ எக்ஸ்ட்ரீம் 200R

சிறந்த பைக் பட்டியலில் 6 வது இடத்தில் ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் முதல் பிரிமியம் ரக 200சிசி பைக் மாடலாக வெளிவந்துள்ள ஹீரோ எக்ஸ்ட்ரீம் 200R குறைந்த விலையில் சிங்கிள் சேனல் ஏபிஎஸ் பிரேக் கொண்ட மாடலாக விளங்குகின்றது. இந்த பைக் 200 சிசி மற்றும் 160சிசி, 180சிசி என இரண்டில் உள்ள மாடல்களை விட சவாலான விலையில் அமைந்துள்ளது.

40 கிமீ மைலேஜ் தரவல்ல 200 சிசி பைக் மாடலாக விளங்கும் ஹீரோ எக்ஸ்ட்ரீம் 200R மாடலில் 18.4ps மற்றும் அதிகப்பட்ச டார்க்யூவாக 17.1nm ஆற்றலை கொண்டது. இந்த இன்ஜின் மேம்படுத்தப்பட்டு 150cc-யாக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த மோட்டார் சைக்கிள் அதிகபட்ச வேகாமாக 114km/hr மற்றும் 0 முதல் 60km/hr வேகத்தை 4.6 செகண்டுகளில் தொட்டு விடும் இயல்பை பெற்றுள்ளது.

ஹீரோ எக்ஸ்ட்ரீம் 200R பைக் விலை ரூ.  89,900 (எக்ஸ்-ஷோரூம்)

Share