Automobile Tamilan

எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களின் விலை உயர்வு.., புதிய EPMS 2024 மானியம் என்றால் என்ன ?

longest range electric scooters list 2024

FAME-II மானியம் முடிவுக்கு வந்த நிலையில் இந்தியாவில் நடைமுறைக்கு வந்துள்ள புதிய EPMS 2024 (Electric Mobility Promotion Scheme) மானியத்தின் கீழ் இரு சக்கர வாகனங்கள் மற்றும் மூன்று சக்கர வாகனங்களின் மானியம் குறைக்கப்பட்டதை தொடர்ந்து விலை உயர்ந்துள்ளது.

புதிய எலக்ட்ரிக் மொபிலிட்டி ஊக்குவிப்பு திட்டம் 2024 கீழ் ஏப்ரல் முதல் 31 ஜூலை 2024 வரையிலான காலகட்டத்துக்கு மட்டும் அறிவிக்கப்பட்டுள்ளது. புதிய நடைமுறையின் கீழ் ஒரு எலக்ட்ரிக் ஸ்கூட்டருக்கான மானியம் அதிகபட்சமாக ரூ.10,000 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மேலும் மூன்று சக்கர எலக்ட்ரிக் ரிக்‌ஷா மற்றும் இ-கார்ட் வாகனங்களுக்கும் மானியம் குறைக்கப்பட்டுள்ளது.

மின்சார இரு சக்கர வாகனங்களுக்கான மானியம் ஒரு Kwh பேட்டரிக்கு ரூ.10,000 ஆக இருந்த மானியம் ரூ. 5,000 ஆக குறைக்கப்பட்டுள்ளது, எனவே, ஒரு வாகனத்திற்கு அதிகபட்சமாக ரூ.10,000 வரை மட்டுமே பலன் கிடைக்கும்.

இந்தியாவின் பிரசத்தி பெற்ற ஏதெர் எனர்ஜி நிறுவன 3.7kwh பேட்டரி பெற்ற மாடல் விலை ரூ.1,62,932 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. முன்பாக இந்த மாடலின் விலை ரூ.1,44,871 ஆக கிடைத்து வந்தது.

பிரபலமான டிவிஎஸ் ஐக்யூப் எலக்ட்ரிக் ஸ்கூட்டரில் உள்ள துவக்க நிலை வேரியண்ட் ஐக்யூப் ஸ்கூட்டர் விலை ரூ.1,37,363 ஆக உள்ளது. முந்தைய மாடலை விட ரூ.2,300 வரை உயர்த்தப்பட்டுள்ளது. ஐக்யூப் S விலை ரூ.6,500 வரை உயர்த்தப்பட்டு தற்பொழுது ரூ.1,47,155 ஆக உள்ளது.

மெட்டல் பாடி பெற்ற பஜாஜ் சேட்டக் எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் அர்பேன் விலை ரூ.1,32,136 ஆக உயர்ந்துள்ளது. பிரீமியம் வேரியண்டின் விலை ரூ.1,56,060 ஆக உள்ளது.

Exit mobile version