Automobile Tamilan

பிஎஸ் 6 உட்பட பல்வேறு டெக் வசதிகளுடன் ஹோண்டா ஆக்டிவா வருகை

முதன்மையான ஸ்கூட்டர் மாடலாக ஹோண்டா ஆக்டிவா விளங்குகின்ற ஸ்கூட்டரின் அடுத்த தலைமுறையில் பல்வேறு டெக் வசதிகளுடன் மிகவும் ஸ்டைலிஷாகவும், பாரத் ஸ்டேஜ் 6 மாசு விதிகளுக்கு உட்பட்ட என்ஜின் பெற்றதாக விற்பனைக்கு வரக்கூடும் என தற்போது உறுதியாகியுள்ளது.

ஆட்டோகார் ப்ரோ இதழுக்கு ஹோண்டா மோட்டார்சைக்கிள் நிறுவன தலைமை அதிகாரி குல்லேரியா அளித்த சிறப்பு பேட்டியில், மேம்படுத்தப்பட்ட புதிய தலைமுறை ஆக்டிவா ஸ்கூட்டர் தயாரிப்பு பணிகள் தீவராக நடைபெற்று வருகின்றது என குறிப்பிட்டுள்ளார்.

2020 ஹோண்டா ஆக்டிவா ஸ்கூட்டர்

கடந்த நிதியாண்டில் 3,008,334 ஆக்டிவா ஸ்கூட்டர்கள் விற்பனை செயப்பட்டிருக்கும் நிலையில், முந்தையை ஆண்டை விட 4 சதவிதம் சரிவடைந்துள்ளது. கடந்த 2018 ஆம் நிதியாண்டில் 3,154,030 ஆக்டிவா ஸ்கூட்டர்கள் விற்பனை செய்யப்படிருந்தது.

தொடர்ந்து இந்தியாவின் முதன்மையான 2 சக்கர வாகனமாக விளங்குகின்ற ஆக்டிவா ஸ்கூட்டரின் அடுத்த தலைமுறையின் தயாரிப்பு பணியை இந்தியா ஹோண்டா மோட்டார்சைக்கிள் மேற்கொண்டுள்ளது. இந்த ஸ்கூட்டரில் பிஎஸ் 6 மாசு கட்டுப்பாடு விதிகளுக்கு ஏற்ற என்ஜின் பெற்றிருப்பதுடன் , இதுவரை நீங்கள் எதிர்பார்க்காத ஆச்சிரியமளிக்கும் பல்வேறு ஸ்மார்ட் டெக் வசதிகளை கொண்டதாக இந்த ஸ்கூட்டர் விளங்கும் என லைமை அதிகாரி சிங் குலேரியா தெரிவித்துள்ளார்.

நவீன டெக் வளர்ச்சிக்கு ஏற்ப பல்வேறு அம்சங்களை பெற்றதாக ஆக்டிவா 6ஜி ஸ்கூட்டர் விற்பனைக்கு இந்த ஆண்டின் இறுதி மாதங்கள் அல்லது அடுத்த ஆண்டின் தொடக்க மாதங்களில் விற்பனைக்கு வெளியிடப்படலாம்.

Exit mobile version