Automobile Tamilan

புதிய ஹீரோ கரீஸ்மா XMR அறிமுக தேதி வெளியானது

karizma xmr

வரும் ஆகஸ்ட் 29 ஆம் தேதி ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் தனது சக்தி வாய்ந்த முதல் லிக்யூடு கூல்டு என்ஜின் பெற்ற கரீஸ்மா XMR ஃபேரிங் ஸ்டைல் ஸ்போர்ட்டிவ் பைக்கினை விற்பனைக்கு வெளியிட உள்ளது.

புதிய கரீஸ்மா எக்ஸ்எம்ஆர் பைக்கில் 210சிசி என்ஜின் பொருத்தப்பட்டு அதிகபட்சமாக 25 hp பவர் வெளிப்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. இந்நிறுவனத்தின் முதல் லிக்யூடு கூல்டு என்ஜின் மற்றும் 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் கொண்டதாக இருக்கலாம்.

Hero Karizma XMR

210cc லிக்யூடு கூல்டு என்ஜின் பொருத்தப்பட்டு அதிகபட்சமாக 25 Hp பவர் மற்றும் 35 Nm வரையிலான டார்க் வெளிப்படுத்துவதுடன், இதில் 6 வேக மேனுவல் கியர்பாக்ஸ் உடன் சிலிப்பர் கிளட்ச் அசிஸ்ட் கொடுக்கப்பட்டிருக்கும்.

முன்புறத்தில் டெலிஸ்கோபிக் ஃபோர்க், பின்புறத்தில் மோனோ ஷாக் அப்சார்பருடன் இருபக்க டயர்களிலும் டிஸ்க் பிரேக் கொடுக்கப்பட்டு டூயல் சேனல் ஏபிஎஸ் பெற்றிருக்கலாம்.

இந்த மாடலில் எல்இடி ஹெட்லைட், எல்இடி இண்டிகேட்டர்களுடன் குறைந்த செட் கிளிப் ஆன் ஹேண்டில்பார் பெற்று டிஜிட்டல் கிஸ்ட்டருடன் முழுமையாக ஃபேரிங் பேனல்களுடன் நவீனத்துவமான பாடி கிராபிக்ஸ் பெற்றிருக்கலாம்.

புதிய ஹீரோ கரீஸ்மா எக்ஸ்எம்ஆர் 210 பைக்கின் விலை ரூ.1.60 லட்சத்துக்குள் துவங்கலாம். முழுமையான விபரங்கள் ஆகஸ்ட் 29, 2023-ல் வெளியாக உள்ளது.

Exit mobile version