Automobile Tamilan

ஆகஸ்ட் 30, புதிய ராயல் என்ஃபீல்டு புல்லட் 350 அறிமுகமாகிறது

royal enfield logo

1931 ஆம் ஆண்டு முதல் உலகில் மிக நீண்ட காலமாக உற்பத்தி செய்யப்படுகின்ற ராயல் என்ஃபீல்டு மோட்டார்சைக்கிள் நிறுவனத்தின் புதிய புல்லட் 350 பைக் மாடல் J-சீரிஸ் என்ஜின் பிளாட்ஃபாரத்தில் பல்வேறு மேம்பாடுகளை கொண்டதாகவும் தொடர்ந்து ரெட்ரோ வடிவமைப்பினை தக்கவைத்துக் கொண்டிருக்கும்.

91 ஆண்டு காலமாக உற்பத்தி செய்யப்படு வருகின்ற புல்லட் மாடலில் சிறிய மாற்றங்கள் மட்டும் பெற்று தொடர்ந்து தனது எக்ஸ்ஹாஸ்ட் சப்தம் மாற்றமில்லாமல் வரக்கூடும்.

New Royal Enfield Bullet 350

J-சீரிஸ் என்ஜின் பிளாட்ஃபாரத்தில் ஏற்கனவே மீட்டியோர் 350, கிளாசிக் 350 மற்றும் ஹண்டர் 350 ஆகிய மாடல்கள் விற்பனையில் உள்ளது. முந்தைய  346cc UCE என்ஜின் பெற்றதாக விற்பனை செய்யப்பட்டு வந்த புல்லட்டில் தற்பொழுது புதிய 349cc J வரிசை என்ஜின் பெற உள்ளது.

விற்பனையில் உள்ள மற்ற மாடல்களை போலவே, 20hp பவர் மற்றும் 27Nm டார்க் வெளிப்படுத்துவதுடன் 5 வேக மேனுவல் கியர்பாக்ஸ் ஆனது கொண்டிருக்கும். மற்றபடி, புல்லட் 350 என்ஜின் மிக சிறப்பான மைலேஜ் தரவல்லதாக விளங்கும்.

விற்பனையில் உள்ள புல்லட் மாடல் கிக் ஸ்டார்ட் கொண்டதாகவும், புல்லட் ES என்ற பெயரில் எலக்ட்ரிக் ஸ்டார்ட் கொண்ட வேரியண்டும் கிடைத்து வருகின்றது. வரும் புதிய மாடல் கிக் ஸ்டார்ட் கொண்ட வேரியண்ட் தொடர்ந்து பாரம்பரியத்தை தக்க வைத்துக் கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

தற்போது விற்பனையில் உள்ள மாடலைப் விட 2023 ராயல் என்ஃபீல்டு புல்லட் 350 மாடல் ரூ.10,000 வரை விலை கூடுதலாக அமையலாம்.

வரும் ஆகஸ்ட் 30 ஆம் தேதி மற்றும் செப்டம்பர் 1 ஆம் தேதி ராயல் என்ஃபீல்டு நிறுவனம் அறிமுகத்தை மேற்கொள்ள உள்ளது.

Exit mobile version