Automobile Tamilan

செப்டம்பர் 7.., ஏப்ரிலியா RS 440 ஸ்போர்ட்டிவ் பைக் அறிமுகம்

Aprilia RS 440

மிக நேர்த்தியான ஸ்போர்ட்டிவ் ஸ்டைலை பெற்ற ஏப்ரிலியா RS 440 ஸ்போர்ட்டிவ் பைக் மாடலை செப்டம்பர் 7, 2023-ல் பிரசத்தி பெற்ற கேடிஎம் RC 390 மற்றும் கவாஸாகி நின்ஜா 400 பைக்குகளுக்கு போட்டியாக களமிறக்க உள்ளது.

இந்தியா மற்றும் பல்வேறு வெளிநாடுகளில் தொடர்ந்து சோதனை செய்யப்பட்டு வந்த RS440 இந்தியாவில் தயாரிக்கப்பட்டு பல்வேறு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய வாப்ப்புள்ளது.

Aprilia RS 440

ஏப்ரிலியா பைக் நிறுவனம் விற்பனை செய்து வருகின்ற RS660 மாடலின் என்ஜினை மாற்றியமைத்து 440cc ஆக குறைத்து பேரலல் ட்வீன் சிலிண்டர் பெற்றதாக விற்பனைக்கு கொண்டு வரக்கூடும். இதன் பவர் அதிகபட்சமாக 45 hp-க்கு கூடுதலாக அமைந்திருக்கலாம்.

பலமுறை சோதனை ஓட்டத்தில் சிக்கிய மாடலை போன்றே ஸ்போர்ட்டிவ் பைக் தோற்றத்தை பெற்று முழுமையாக முன் ஃபேரிங் செய்யப்பட்டு,  கிளிப்-ஆன் ஹேண்டில்பார் மற்றும் பில்லியன் ரைடருக்கு உயர்வுடன் ஸ்பிளிட் சீட்  உள்ளது.

அதன் ஸ்டைலிங் அம்சம் RS 660 மற்றும் RSV4 சூப்பர் பைக்கிலிருந்து பெற்றிருக்கலாம் என எதிர்பார்க்கலாம். முழுமையான விபரங்களை செப்டம்பர் 7-ல் அறிந்து கொள்ளலாம்.

Exit mobile version