Automobile Tamilan

ஏதெர் 450S எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் உற்பத்தி துவங்கியது

ather-450s-production-begins

பட்ஜெட் விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள ஏதெர் எனெர்ஜி நிறுவனத்தின் புதிய  450S எலக்ட்ரிக் ஸ்கூட்டர் விலை ரூ.1.30 லட்சம் ஆக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 7.0 அங்குல டீப்வியூ டிஸ்பிளே கொண்ட டிஜிட்டல் கிளஸ்ட்டரில் கனெக்ட்டிவிட்டி வசதிகளை கொண்டுள்ளது.

2.9 kWh லித்தியம் அயன் பேட்டரி பொருத்தப்பட்டுள்ள 450 எஸ் மாடல் 115 கிலோமீட்டர் வரை சான்றளிக்கப்பட்ட வரம்பை வழங்குகிறது.

Ather 450S

115 கிமீ என உறுதிப்படுத்தப்பட்டுள்ளதால், நிகழ்நேரத்தில் 80-85 கிமீ வரை ரேன்ஜ் வழங்கலாம். பேட்டரி திறன் 2.9 kWh ஆக பெற்ற ஏதெர் 450S டாப் ஸ்பீடு 90Km/hr ஆக இருக்கும். ஏதெர் எனர்ஜி குறைந்த விலை எலக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடலுக்கான முன்பதிவு நடைபெற்று வருகின்றது.

சமீபத்தில் வெளியிடப்பட்ட டீசரில், 450S மாடல் புளூடூத் இணைப்பு மற்றும் டிஜிட்டல் கிளஸ்ட்டர் LCD யூனிட் ஆனது ஸ்பீடோமீட்டர் மற்றும் திரையின் மையத்தில் மிகவும் எளிமையான அமைப்பைக் கொண்டுள்ள பெரிய, தடிமனான எழுத்துருவில் ஸ்பீட் காட்டப்பட்டுள்ளது. ரேஞ்சு எண்களிலும் காட்டப்படும். 450S நான்கு ரைடிங் மோடுகளை பெற்று அவை SmartEco, Eco, Ride மற்றும் Sport பெற்றுள்ளது.

ஏதெர் 450X குறைந்த விலை 2.9 பேட்டரி திறன்  ஆக பெற்ற மாடல் டாப் ஸ்பீடு 90Km/hr ஆக இருக்கும். இதன் ரேஞ்சு 111 கிமீ கொண்டதாக இருக்கும். 450S மற்றும் 450X (2.9kWh) க்கான சார்ஜிங் நேரம் 8 மணிநேரம் 36 நிமிடங்கள் ஆகும். அதே சமயம் 450X (3.7kWh) க்கு ஐந்து மணிநேரம் 45 நிமிடங்கள் ஆகும்.

Ather 450S – ₹ 1,29,949

Ather 450X 2.9 Kwh – ₹ 1,37,950

Ather 450X 3.7 Kwh – ₹ 1,44,871

Exit mobile version