Automobile Tamilan

ஏதெரின் எலக்ட்ரிக் பைக் கான்செப்ட் அறிமுகமாகிறதா..!

ather 450x escooter transparent body panels

வரும் ஏப்ரல் 6 ஆம் தேதி ஏதெர் எனர்ஜி நடத்த உள்ள ரிஸ்டா அறிமுக விழாவில் புதுப்பிக்கப்பட்ட 450 சீரிஸ் உட்பட புதிய எலக்ட்ரிக் பைக் கான்செப்ட்டுகளை காட்சிப்படுத்த திட்டமிட்டுள்ளது.

இ-பைக் கான்செப்ட் அறிமுகத்தை ஏறக்குறைய உறுதி செய்துள்ள நிலையில் விற்பனைக்கு முதல் மாடல் அடுத்த 3-5 ஆண்டுகளில் அறிமுகம் செய்யப்படலாம்.

Ather Electric Motorcycle

ஃபேமிலி ரிஸ்டா ஸ்கூட்டரை பற்றி தொடர்ந்து பல்வேறு டீசர்களை வெளியிட்டு வருகின்ற நிலையில் ஏப்ரல் 6 ஆம் தேதி நடைபெற உள்ள ACDC 24 (Ather Community Day Celebration 2024) கூட்டத்தில் பல்வேறு எதிர்கால திட்டங்கள் உட்பட கூடுதலாக புதிய மின்சார மோட்டார்சைக்கிள் கான்செப்ட்டுகளை காட்சிப்படுத்த வாய்ப்புள்ளது.

2027 ஆம் ஆண்டு இந்நிறுவனம் வெளியிட உள்ள முதல் எலக்ட்ரிக் பைக் அனேகமாக 150சிசி பெட்ரோல் மாடல்களுக்கு இணையான செயல்திறன் மற்றும் நேர்த்தியான ஸ்போர்ட்டிவ் டிசைன் வடிவமைப்பினை கொண்டிருக்கலாம்.

இந்தியாவின் எலக்ட்ரிக் பைக் சந்தையில் டார்க், மேட்டர், அல்ட்ராவைலட் உட்பட பல்வேறு நிறுவனங்கள் தங்கள் மாடல்களை விற்பனை செய்து வருகின்ற நிலையில் ஏத்தரின் பைக் ரூ.2 லட்சத்துக்கும் கூடுதலான விலையில் வரக்கூடும்.

ரிஸ்டா தொடர்பாக சமீபத்தில் இந்நிறுவனம் வெளியிட்ட டீசர்களில் 40 அடி உயரத்திலிருந்து எறிப்படும் பேட்டரி, 400 மிமீ நீர் நிறைந்த பகுதியில் பயணிக்கும் டீசர் வீடியோவினை வெளியிட்டிருந்தது.

இந்த நிகழ்வில் ஏதெரின் பிரசத்தி பெற்ற 450X, 450S ஆகிய இரு மாடல்களில் புதுப்பிக்கப்பட்ட அம்சங்கள் மற்றும் நிறங்களுடன் வரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Exit mobile version