Automobile Tamilan

ஏதெரின் பட்ஜெட் விலை EL எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் டீசர் வெளியானது

ather el scooter platform teased

இந்தியாவின் மிக வேகமாக வளர்ந்து வரும் ஏதெர் எனர்ஜி நிறுவனத்தின் பட்ஜெட் விலை EL ஸ்கூட்டர் பிளாட்ஃபாரத்தில் வரவுள்ள மின்சார ஸ்கூட்டரின் கான்செப்ட்டை முதன்முறையாக டீசர் வாயிலாக உறுதிப்படுத்தியுள்ளது.

ஆகஸ்ட் 30 ஆம் தேதி நடைபெற உள்ள ஏதெர் கம்யூனிட்டி தினத்தில் ஃபாஸ்ட் சார்ஜர் மற்றும் AtherStack 7.0 பல்வேறு மென்பொருள் மேம்பாடு சார்ந்த அமைப்புகள் பல்வேறு முக்கிய அறிவிப்புகளுடன் தனது எலக்ட்ரிக் பைக் குறித்தான அறிவிப்பை வெளியிடலாம்.

EL என்ற பெயரில் உருவாக்கப்படுகின்ற புதிய ஸ்கூட்டர் பிளாட்ஃபாரம் மூலம் தயாரிக்கப்பட உள்ள மாடல் மிகவும் குறைந்த செலவில் தயாரிக்கப்பட்டு உள்நாடு மற்றும் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்ற ஸ்கூட்டர் மாடல்களாக இருக்கலாம்.

குறிப்பாக இந்த கான்செப்ட் நிலை ஸ்கூட்டர் உற்பத்திக்கு  2026  ஆம் ஆண்டின் மத்தியில் விற்பனைக்கு வரக்கூடும் என எதிர்பார்க்கப்படுவதனால், கூடுதலான பூட் ஸ்பேஸ், பேட்டரி ஆப்ஷனில் தற்பொழுது உள்ள 2.9Kwh மற்றும் 3.7 Kwh மட்டும் வழங்கப்படுமா அல்லது குறைந்த பேட்டரி திறனை பெறக்கூடும் என்பது பற்றி தற்பொழுது எந்த உறுதியாக தகவலும் இல்லை.

சமீபத்தில் இந்நிறுவனம் ஒரு கிமீ பயணத்துக்கு ரூ.1 கட்டணமாக BAAS திட்டத்தின் கீழ் ரிஸ்டா மாடலை ரூ.76,000 விலையில் அறிமுகம் செய்துள்ளது.

Exit mobile version