Site icon Automobile Tamilan

ஏத்தர் S340 மின்சார ஸ்கூட்டர் அறிமுக தேதி விபரம் வெளியானது

இந்தியாவில் வளர்ந்து வரும் மின்சார ஸ்கூட்டர் மீதான எதிர்பாரப்பில் ஏத்தர் எனெர்ஜி நிறுவனத்தின் ஏத்தர் எஸ்340 ஸ்கூட்டர் மாடலும் முக்கிய பங்கு வகிக்கின்றது. வருகின்ற ஜூன் 5ந் தேதி முதல் ஏத்தர் S340 ஸ்கூட்டர் மாடல் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட உள்ளது.

ஏத்தர் எஸ்340 ஸ்கூட்டர்

பெங்களூருவை தலைமையிடமாக கொண்டு செயல்படும் ஏத்தர் எனெர்ஜி எனும் ஸ்டார்ட் அப் நிறுவனம், 2013 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு மின்சாரத்தில் இயங்கும் ஸ்கூட்டர் வடிவமைப்பில் மிக தீவரமான முயற்சியில் ஈடுபட்டு வருகின்றது. இந்நிறுவனம் 2016யில் முதன்முறையாக காட்சிப்படுத்திய எஸ் 340 ஸ்கூட்டர் மாடல் தற்போது உற்பத்தி நிலையை எட்டியுள்ளது.

ஏதர் எஸ் 340 ஸ்கூட்டரில் உள்ள IP67 தரச்சான்றிதழ் பெறப்பட்ட வாட்டர் ப்ரூஃப் லித்தியம் ஐயன் பேட்டரி 80 % சார்ஜ் ஏற வெறும் 50 நிமிடங்கள் மட்டுமே எடுத்துக்கொள்ளும். இதன் முழுமையான சார்ஜில் 60 கிமீ தூரமும் அதிகபட்ச வேகமாக 72 கிமீ வரை செல்லக்கூடியதாகும். இந்த பேட்டரியன் ஆயுட்காலம் சராசரியாக 50,000 கிமீ தான்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஸ்கூட்டரில் வாட்டர் ப்ரூஃப் சார்ஜர், வாட்டர் ப்ரூஃப் டச் ஸ்கிரின் டேஸ்போர்டு  கொண்ட டிஜிட்டல் இன்ஸ்டூரூமென்ட் கிளஸ்ட்டர் ஆன்ட்ராய்டு ஸ்மார்ட் மொபைலுடன் இணைந்து செயல்படும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில் எல்இடி முகப்பு மற்றும் டெயில் விளக்குகளை பெற்றுள்ளது.

முதற்கட்டமாக வருகின்ற ஜூன் மாத விற்பனைக்கு வரவுள்ள இந்த மின் ஸ்கூட்டர் பெங்களூரு நகரத்தில் தொடங்கப்பட்டு படிப்படியாக பல்வேறு முன்னணி நகரங்களில் விரிவுப்படுத்த ஏதர் திட்டமிட்டுள்ளது. மேலும் பெங்களுருவில் மிக விரைவாக சார்ஜ் ஏறும் வகையிலான மையங்களை 30 சார்ஜிங் ஸ்டேஷனை எத்தர் நிறுவனம் பெங்களூருவில் நிறுவப்பட்டுள்ளது.

ஏத்தர் எஸ் 340 ஸ்கூட்டர் விலை ரூ. 75,000 என நிர்ணயம் செய்யப்பட வாய்ப்புகள் உள்ளது. இந்த நிறுவனத்தில் நாட்டின் மிகப்பெரிய இருச்சகர வாகன தயாரிப்பாளரான ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் ரூபாய் 205 கோடியை முதலீடு செய்துள்ளது.

Exit mobile version