Automobile Tamilan

பஜாஜ் ஃப்ரீடம் சிஎன்ஜி பைக் ஏற்றுமதி செய்யப்படுகின்றதா..!

உலகின் முதல் சிஎன்ஜி மோட்டார் சைக்கிளை பஜாஜ் வெளியிட்டுள்ள மாடல் ஆனது தற்பொழுது உற்பத்திக்கு தயாராகி வருவதால் இந்தியா மட்டுமல்லாமல் ஆறு வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய என் இந்நிறுவனம் திட்டமிட்டு இருக்கின்றது.

இந்தியாவில் முதற்கட்டமாக குஜராத் மற்றும் மகாராஷ்டிரா என இரு மாநிலங்களில் மட்டும் கிடைக்க துவங்கியுள்ளது. இந்த மாடல் ஆனது அடுத்த மூன்று மாதங்களுக்குள் நாட்டின் பல்வேறு பகுதிகளில் படிப்படியாக விரிவுபடுத்தப்படும் என இந்நிறுவனம் குறிப்பிடுகின்றது இது தவிர சர்வதேச சந்தைகளான எகிப்து, தான்சினியா, பெரு, கொலம்பியா, பங்களாதேஷ் மற்றும் இந்தோனேசியா ஆகிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய உள்ளது.

  1. Bajaj Freedom 125 cng

ஆரம்பகட்ட உற்பத்தி முதல் மூன்று மாதங்களுக்கு 10,000 ஆகவும் அதன் பிறகு படிப்படியாக உயர்த்தப்பட்டு இந்த நிதி ஆண்டியின் இறுதிக்குள் ஆண்டுக்கு 30 ஆயிரம் முதல் 40 ஆயிரம் யூனிட்களை தயாரிக்க பஜாஜ் ஆட்டோ நிறுவனம் திட்டமிட்டு இருக்கின்றது.

பஜாஜ் ஆட்டோ நிறுவனம் இந்தியாவில் உற்பத்தி செய்யப்படுகின்ற பைக்குகளிலும் 35 முதல் 40% வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுவதனால் சிஎன்ஜி பைக்கிலும் மிகப் பெரிய ஏற்றுமதி வாய்ப்பினை உருவாக்குவதற்கே பஜாஜ் முக்கியத்துவம் கொடுத்து வருகின்றது

 

Exit mobile version