2018 பஜாஜ் பல்ஸர் 150 பைக் டிஸ்க் பிரேக்குடன் விற்பனைக்கு வந்தது

இந்திய இளைஞர்களின் மிக விருப்பமான ஸ்போர்ட்டிவ் மாடலாக விளங்கும் பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் 2018 பஜாஜ் பல்ஸர் 150 பைக் மாடல் முன் மற்றும் பின் சக்கரங்களில் டிஸ்க் பிரேக் பெற்று மார்ச் மாத இறுதியிலிருந்து விற்பனை செய்யப்பட்டு வருவதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

2018 பஜாஜ் பல்ஸர் 150

இந்தியாவில் 125சிசி மற்றும் அதற்கு கூடுதலான சிசி பெற்ற மோட்டார்சைக்கிள்களுக்கு ஏப்ரல் 1ந் தேதிக்கு பிறகு அறிமுகம் செய்யப்படுகின்ற மாடல்களுக்கு ஏபிஎஸ் பிரேக் கட்டாயம் என மத்திய அரசு உத்தரவிட்டுள்ள நிலையில், பஜாஜ் பல்சர் 150 பைக் மார்ச் மாத இறுதி முதல் டீலர்கள் வாயிலாக விற்பனை செய்யப்பட்டு வருவதாக தெரிகின்றது.

புதிதாக வந்துள்ள பல்ஸர் 150 ட்வீன் டிஸ்க் பைக்கில் கருப்பு நீலம், கருப்பு சிவப்பு மற்றும் கருப்பு க்ரோம் ஆகிய மூன்று நிறங்களுடன், இரட்டை பிரிவு கொண்ட இருக்கை, முன் மற்றும் பின் சக்கரத்தில் டிஸ்க் பிரேக், 17 அங்குல மேட் ஃபினிஷ் அலாய் வீல், புதிய கிராப் ரெயில் அலுமினிய பூட் ரெஸ்ட் ஆகியவற்றை கொண்டுள்ளது.

முந்தைய பல்சர் 150 எஞ்சினை பெற்றிருந்தாலும் மிக சிறப்பான வகையில் இரைச்சல், உதறல் மற்றும் கடினத்தன்மை ஆகியவை கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. 14 ஹெச்பி ஆற்றல் மற்றும் 13 என்எம் இழுவைத் திறன் வழங்கும் 149.5சிசி இரு வால்வுகளை கொண்ட இரட்டை ஸ்பார்க் பிளக் பெற்ற மாடலாக விளங்குகின்றது.

முன்புறத்தில் 260 மிமீ டிஸெக் மற்றும் பின்புறத்தில் 230 மிமீ டிஸ்க் பிரேக் பெற்றுள்ள இந்த மாடல் முந்தைய மாடலை விட மிக சிறப்பான பிரேக்கிங் திறனை வெளிப்படுத்துவதாக விளங்கும் என கூறப்படுகின்றது.

அப்பாச்சி 160 , ஹோண்டா சிபி யூனிகார்ன் 160, ஜிக்ஸெர் ஆகிய பைக்குகளை எதிர்கொள்கின்ற பல்ஸர் 150 பைக் விலை ரூ.78,016 (எக்ஸ்-ஷோரூம் டெல்லி)