Automobile Tamilan

2024 பஜாஜ் பல்சர் NS160 vs போட்டியாளர்களின் என்ஜின், விலை, வசதிகள் ஒப்பீடு

2024 Bajaj Pulsar NS160 vs TVS Apache RTR 160 4V vs Hero Xtreme 160R 4V

160cc சந்தையில் விற்பனையில் உள்ள பைக்குகளில் பிரீமியம் ஸ்டைல் கொண்ட பஜாஜ் பல்சர் NS160 Vs டிவிஎஸ் அப்பாச்சி RTR 160 4V vs ஹீரோ எக்ஸ்ட்ரீம் 160R 4V ஆகிய மூன்று மாடல்களின் ஒப்பீடு செய்து அறிந்த கொள்ளலாம்.

மூன்று மாடல்களும் ஸ்போர்ட்டிவ் நேக்டூ ஸ்டைல் பெற்றதாகவும் நவீனத்துவமான எல்இடி ஹெட்லைட் பெற்றதாகவும், டிஜிட்டல் கிளஸ்ட்டர் என ஒன்றுக்கு ஒன்று வசதிகளில் சளைத்தவை இல்லை என்றாலும் சிறப்பான மாடலை தேர்ந்தெடுக்கும் வகையில் தொகுத்துள்ளேன்.

2024 பஜாஜ் பல்சர் NS160 vs டிவிஎஸ் அப்பாச்சி RTR 160 4V vs ஹீரோ எக்ஸ்ட்ரீம் 160R 4V

புதுப்பிக்கப்பட்ட பஜாஜ் பல்சர் என்எஸ்160 பைக் மாடலில் 160.3cc ஒற்றை சிலிண்டர் ஆயில் கூல்டு என்ஜின் 4 வால்வு பெற்று 9,000 rpm-ல் அதிகபட்சமாக 17.03 bhp பவர் மற்றும் 7,250 rpm-ல் டார்க் 14.6 Nm வரை உற்பத்தி செய்கின்ற நிலையில் ஐந்து வேக கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது.

இந்த பிரிவில் ரைடிங் மோடு பெற்றதாக உள்ள ஒரே மாடலாக விளங்கும் அப்பாச்சி ஆர்டிஆர் 160 4வி பைக்கில் 4 வால்வுகளை பெற்று 159.7cc ஒற்றை சிலிண்டர் ஏர்கூல்டு என்ஜின் ஸ்போர்ட், அர்பன் மற்றும் ரெயின் என மூன்று விதமான ரைடிங் மோடுகள் இடம்பெற்றுள்ளது. Sport மோட் 17.55hp பவரை 9250 rpm-லும், டார்க் 14.73 Nm ஆனது 7250 rpm அடுத்து, Urban/ Rain மோட் 15.64 hp பவரை 8600 rpm-ல், டார்க் 14.14 Nm ஆனது 7250 rpm-ல் வழங்குகின்றது. இதில் 5 வேக கியர்பாக்ஸ் உள்ளது.

அடுத்து ஸ்போர்ட்டிவ் நேக்டூ ஸ்டைலில் 4 வால்வுகளை பெற்ற எக்ஸ்ட்ரீம் 160R 4V பைக்கில் 163.2cc ஏர்-ஆயில் கூல்டூ என்ஜின் அதிகபட்சமாக 8500rpm-ல் 16.9 hp பவர் மற்றும் 6500rpm-ல் 14.5 Nm டார்க் வெளிப்படுத்துகிறது. இதில் 5 வேக கியர்பாக்ஸ் உள்ளது.

 Bajaj Pulsar NS160 Apache RTR 160 4V Hero Xtreme 160R 4V
எஞ்சின் 160.3cc, single cyl, oil-cooled 159.7cc, single-cyl, air-cooled 163.2cc, single cyl, oil-cooled
பவர் 17.03 hp at 9,250rpm 17.55 hp at 9000 rpm 17 hp at 9000 rpm
டார்க் 14.6 Nm at 7,250rpm 14.73 Nm at 7250 rpm 14.5 Nm at 7250 rpm
கியர்பாக்ஸ் 5-speed 5-speed 5-Speed

இந்த மூன்று பைக்குகளில் அதிகபட்சமாக டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 160 4வி பைக் மாடல் முன்னிலையில் உள்ளது. அதனை தொடர்ந்து பல்சர் என்எஸ் 160 மற்றும் எக்ஸ்ட்ரீம் 160ஆர் 4வி உள்ளது.

சஸ்பென்ஷன், பிரேக்கிங்

2024 பஜாஜின் பல்சர் என்எஸ்160 பைக்கின் முன்புறத்தில் அப் சைடு டவுன் ஃபோர்க் மற்றும் மோனோஷாக் அப்சார்பர் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த மாடலின் முன்புறத்தில் 300 மிமீ டிஸ்க் மற்றும் பின்புறத்தில் 230 மிமீ டிஸ்க் பிரேக்குடன் டூயல் சேனல் ஏபிஎஸ் இணைக்கப்பட்டுள்ளது.  முன்புறத்தில் 100/80-17 டயர் மற்றும் பின்புறத்தில் 130/70-17 டயர் வழங்கப்பட்டுள்ளது.

அப்பாச்சி RTR 160 4V மாடலில் முன்பக்கம் டெலிஸ்கோபிக் ஃபோர்க் சஸ்பெனஷன் பொருத்தப்பட்டு 270mm பிடெல் டிஸ்க் பிரேக் உடன் பின்புறத்தில் மோனோஷாக் சஸ்பென்ஷனுடன் 200 மிமீ டிஸ்க் கொண்ட வேரியண்டில் டூயல் சேனல் ஏபிஎஸ் கொண்டுள்ளது. கூடுதலாக ரியர் டிரம் பிரேக், சிங்கிள் சேனல் ஏபிஎஸ் ஆகிய வேரியண்டுகளும் உள்ளது.

12 லிட்டர் பெட்ரோல் டேங்க் உடன் 90/90-17 49P முன்புறத்தில் மற்றும் பின்புறத்தில் ரேடியல் டயர் பெற்ற 130/70 R17 M/C 62P கொண்டுள்ளது.

ஹீரோ எக்ஸ்ட்ரீம் 160ஆர் 4வி பைக்கில் முன்பக்கம் டெலிஸ்கோபிக் ஃபோர்க் சஸ்பெனஷன் மற்றும் மோனோஷாக் அப்சார்பர் பெற்றுள்ளது. சிங்கிள் சேனல் ஏபிஎஸ் உடன் 276 மிமீ டிஸ்க் மற்றும் பின்பக்கத்தில் 220 மிமீ டிஸ்க் உள்ளது.  ட்யூபெலெஸ் டயர் இடம்பெற்று முன்பக்கத்தில் 100/80-17 மற்றும் 130/80-17 பின்பக்கத்தில் உள்ளது.

டிஜிட்டல் கிளஸ்ட்டரின் வசதிகள்

மூன்று பைக்குகளும் டிஜிட்டல் கிளஸ்ட்டர் பெற்று ஆப் வாயிலாக  இணைக்கும் பொழுது ஸ்மார்ட்போன் கனெக்ட்டிவிட்டி இணைப்புடன் பல்வேறு டிஜிட்டல் சார்ந்த வசதிகளை பெற்றதாக அமைந்துள்ளது.

எல்இடி ஹெட்லைட், எல்இடி டெயில் லைட் உள்ளிட்ட வசதிகள் என ஆகியவற்றை மூன்று மாடல்களும் கொண்டுள்ளது.

2024 Bajaj Pulsar NS160 vs TVS Apache RTR 160 4V vs Hero Xtreme 160R 4V onroad price

மூன்று 160cc பைக்குகளும் பெர்ஃபாமென்ஸ் ரைடிங் அனுபவத்தை வழங்கும் நோக்கில் உள்ளன.

160cc bikes விலை (எக்ஸ்-ஷோரூம்) ஆன்-ரோடு விலை
2024 Bajaj Pulsar NS160 ₹ 1,45,920 ₹ 1,81,610
TVS Apache RTR 160 4V ₹ 1,23,870-₹1,34,990 ₹ 1,53,789 – ₹ 1,65,610
Hero Xtreme 160R 4V ₹ 1,27,300- ₹ 1,36,500 ₹ 1,57,085 – ₹ 1,66,753

 

Exit mobile version