Automobile Tamilan

ஜூன் 27.., பஜாஜ்-ட்ரையம்ப் மோட்டார்சைக்கிள் அறிமுகம்

பஜாஜ் ஆட்டோ மற்றும் ட்ரையம்ப் மோட்டார்சைக்கிள் நிறுவனத்தின் முதல் பைக் மாடல் லண்டனில் ஜூன் 27 ஆம் தேதி அறிமுகம் செய்யப்படும் என பஜாஜ் ஆட்டோவின் தலைமை செயல் அதிகாரி ராஜீவ் பஜாஜ் உறுதிப்படுத்தியுள்ளார்.

CNBC-TV18 தொலைக்காட்சிக்கு ராஜீவ் பஜாஜ் அளித்த பேட்டியில்., இந்தியாவில் சோதனை செய்யப்பட்டு வருகின்ற பஜாஜ்-டிரையம்ப் பைக், “ஜூன் இறுதிக்குள், அதாவது ஜூன் 27 ஆம் தேதி” உலகளாவிய அறிமுகம் லண்டனில் ட்ரையம்ப் மூலம் வெளியிடப்படும்.

இந்த பைக் இந்த நிதியாண்டின் இரண்டாம் காலாண்டில் விற்பனைக்கு வரும் என்றும் குறிப்பிட்டுள்ளார். மேலும் அவர் கூறுகையில் ஒன்றுக்கு மேற்பட்ட பைக் அறிமுகம் செய்ய இருப்பதாகவும் குறிப்பிட்டார்.

ட்ரையம்ப் ஸ்டீரிட் டிராக்கர்

இந்தியா உட்பட ஐரோப்பாவிலும் சோதனை ஓட்டத்தில் உள்ள 300-400cc பிரிவில் வரவிருக்கும் இரண்டு பைக் மாடல்களையும் பஜாஜ் ஆட்டோ நிறுவனம் தயாரித்து இந்தியா மற்றும் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய உள்ளது.

ஸ்கிராம்பளர் பைக்கில் லிக்யூடு கூல்டு ஒரு சிலிண்டர் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த என்ஜின் 300-400cc இடையே அமைந்திருக்கலாம். சோதனை ஓட்டத்த்தின் போது 150 கிமீ வேகத்தை பயணிப்பதனால் சிறப்பான பவர் மற்றும் டார்க் வெளிப்படுத்தலாம்.

மேலே லக்கேஜ் பாக்ஸ், சேடில் பேக் மற்றும் டேங்கின் மேலே பை என பல்வேறு ஆக்செரீஸ் பாகங்கள் கொண்டுள்ள இந்த மோட்டார் சைக்கிளின் முன்புறத்தில் 19-இன்ச் வீல் மற்றும் 17-இன்ச் பின்புற மல்டி-ஸ்போக் அலாய் வீல் பெற்று ஆன்-ரோடு மற்றும் ஆஃப்-ரோடு சாகசங்களுக்கு ஏற்ற டயரை பெற்றுள்ளது.

Exit mobile version