Automobile Tamilan

விரைவில்., அர்பனைட் எலக்ட்ரிக் ஸ்கூட்டரை வெளியிடும் பஜாஜ் ஆட்டோ

a3cc4 urbanite scooter range side

பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின், முதல் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடலாக அர்பனைட் பிராண்டில் விற்பனைக்கு அக்டோபர் 16 ஆம் தேதி வெளியிட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏத்தர், ஒகினாவா, 22 கிம்கோ உள்ளிட்ட நிறுவனங்களுக்கு சவால் விடுக்க தயாராகியுள்ளது.

அக்டோபர் 16 ஆம் தேதி வெளியிடப்பட உள்ள இந்த ஸ்கூட்டரின் முழுமையான விபரங்கள் வெளியாகவில்லை. மணிக்கு 70 கிமீ வேகத்தில் பயணிக்கும் திறனுடன் மிக சிறப்பான சிங்கிள் சார்ஜிங் ரேஞ்ச் கொண்டதாக விற்பனைக்கு வெளியிடப்பட உள்ள அர்பனைட் பிராண்டின் முதல் ஸ்கூட்டர் ரக மாடலுக்கு என தனது பிரபலமான சேட்டக் பெயரை பயன்படுத்த வாய்ப்புள்ளதாக எதிர்பார்க்கப்படுகின்றது.

முன்பாக வெளியான சோதனை ஓட்ட படங்கள் மூலம் ரெட்ரோ டிசைன் பாரம்பரியத்தை பெற்று நேர்த்தியான தோற்றத்துடன், நவீனத்துவமான டிஜிட்டல் சார்ந்த வசதிகளை பெற்ற பேட்டரி ஸ்கூட்டர் மாடலாக சேட்டக் விளங்குவதுடன் 12 அங்குல வீல் பெற்று முன்புறத்தில் டிஸ்க் மற்றும் பின்புறத்தில் டிரம் பிரேக் ஆப்ஷனை கொண்டதாக விளங்கும் என தெரிய வந்துள்ளது.

வட்ட வடிவ எல்இடி ஹெட்லைட், எல்இடி டெயில் லைட், அப்ரானில் அமைந்துள்ள டர்ன் இன்டிகேட்டர், ஸ்டெப்டு இருக்கை கொண்டதாகவும் விளங்க உள்ள இந்த ஸ்கூட்டர் தயாரிப்பில் பாஸ் நிறுவனம் முக்கிய பங்காற்றுகின்றது. இந்தியாவில் விற்பனை செய்யப்படுகின்ற ஏத்தர் 450 , ஒகினாவா பிரைஸ் ப்ரோ  போன்ற ஸ்கூட்டருக்கு சவாலாக விளங்க உள்ள பஜாஜின் அர்பனைட் சேட்டக் ஸ்கூட்டர்  ரூ.1 லட்சம் ஆன்ரோடு விலைக்குள் தொடங்க வாய்ப்புகள் உள்ளது.

பஜாஜின் நோக்கம், கார் சந்தையில் பிரபலமாக விளங்கும் டெஸ்லா எலக்ட்ரிக் காரை போன்றே இரு சக்கர வாகன சந்தையின் டெஸ்லாவாக விளங்கும் நோக்கில் செயல்பட்டு வருவதாக ராஜீவ் பஜாஜ் பலமுறை குறிப்பிட்டுள்ளார்.

image source -bikewale

Exit mobile version