Site icon Automobile Tamilan

தற்காலிகமாக பஜாஜ் V12 பைக் உற்பத்தி நிறுத்தம்

இந்தியாவின் பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தால் ஐஎன்எஸ் விக்ராந்த் போர்க்கப்பல் மெட்டல் பாகங்களை கொண்டு வடிவமைக்கப்பட்ட மாடலாக அறிமுகம் வி15 மற்றும் வி12 மாடல்களில் பஜாஜ் V12 பைக்கின் உற்பத்தி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

போதிய வரவேற்பின்மை காரணமாக தற்காலிகமாக பஜாஜ் வி12 என்ற பெயரில் அறிமுகம் செய்யப்பட்ட 125சிசி எஞ்சின் பெற்ற மாடலின் உற்பத்தியை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும், டீசல்கள் வாயிலாக முன்பதிவு மேற்கொள்ளப்படுவதில்லை என தகவல்கள் வெளியாகியுள்ளது.

வி சீரிஸ் பைக்குகளின் தோற்றத்திலே அமைந்துள்ள வி12 பைக்கில் 10.7 ஹெச்பி பவரை வெளிப்படுத்தும் 125 DTS-i எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது.. இதன் டார்க் 11 நியூட்டன் மீட்டர் ஆகும். இதன் முன்பக்கத்தில் 18 அங்குல அலாய் வீல் மற்றும் பின்பக்கத்தில் 16 அங்குல அலாய் வீல் பெற்றுள்ளது. முன்பக்கத்தில் டெலிஸ்கோபிக் ஃபோர்க்குகள் , பின்புறத்தில் இரண்டு ஸ்பிரிங் கொண்ட சாக் அப்சார்பர்களை பெற்றுள்ளது. இரு டயரில் 130 மீமீ டிரம் பிரேக் பொருத்தப்பட்டுள்ளது.

மேலும் டியூப்லெஸ் டயர்களுக்கு பதிலாக ட்யூப் டயர் பொருத்தப்பட்டுள்ள வி12 பைக்கில் 13 லிட்டர் பெட்ரோல் டேங்க் பெற்றுள்ளது.

பஜாஜ் டிஸ்கவர் 125 மற்றும் வி15 மாடலுக்கு இடையில் நிலைநிறுத்தப்பட்ட இந்த மாடலின் விற்பனை கடந்த சில மாதங்களாக 1000 எண்ணிக்கைக்கு குறைவாக அமைந்திருப்பதனால் , தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக தெரிகின்றது. சில மாறுதல்களுடன் அடுத்த சில மாதங்களில் சந்தைக்கு விற்பனைக்கு வரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

 

 

Exit mobile version