Automobile Tamil

பெனெல்லி இம்பீரியல் 400 Vs ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 350 Vs ஜாவா – ஒப்பீடு

jawa-and-jawa-forty-two-bike

ரெட்ரோ மோட்டார்சைக்கிள் வடிவமைப்பினை பெற்ற ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 350 மாடலுக்கு போட்டியை ஏற்படுத்தும் ஜாவா மாடலை தொடர்ந்து அடுத்து வந்துள்ள பெனெல்லி இம்பீரியல் 400 ஆகிய மூன்று மாடல்களுடன் உள்ள முக்கிய வித்தியாசங்களுடன் விலையை ஒப்பீடு செய்து அறிந்து கொள்ளலாம்.

மூன்று பைக்குகளும் 400சிசி க்கு குறைவான திறன் பெற்றவையாக இருந்தாலும் மற்ற மாடல்களை விட அதிகபட்ச பவரை ஜாவா கிளாசிக் வழங்குகின்றது. அதிக சிசி கொண்டதாக இம்பீரியல் 400 பெற்றிருந்தாலும் அதிகபட்ச டார்க்கை இந்த மாடல் பெற்றுள்ளது.

பெனெல்லி இம்பீரியல் 400 ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 350 ஜாவா
சிசி 374 cc என்ஜின் 346 cc என்ஜின் 293 cc என்ஜின்
பவர் 21 PS – 5,500 rpm 20.1 PS – 5,250 rpm 27.4 PS
டார்க் 29 Nm – 4,500 rpm 28 Nm – 4,000 rpm 28 Nm
கியர்பாக்ஸ் 5 வேகம் 5 வேகம் 6 வேகம்

பொதுவாக மூன்று மாடல்களும் டூயல் சேனல் ஏபிஎஸ் பிரேக் பெற்றிருந்தாலும், கிளாசிக் 350 மற்றும் ஜாவா ஆகிய இரு மாடல்களும் சிங்கிள் சேனல் ஏபிஎஸ் பிரேக்குடனும் கிடைக்கின்றது. வரும் காலத்தில் இம்பீரியல் 400 மாடலிலும் சிங்கிள் சேனல் ஏபிஎஸ் இணைக்கப்படலாம்.

முன் சஸ்பென்ஷன் டெலிஸ்கோபிக் டெலிஸ்கோபிக் டெலிஸ்கோபிக்
பின் சஸ்பென்ஷன் ட்வீன் ஸ்பிரிங் ட்வீன் ஸ்பிரிங் ட்வீன் ஸ்பிரிங்
முன் பிரேக் 300 mm டிஸ்க் 280 mm டிஸ்க் 280 mm டிஸ்க்
பின் பிரேக் 240 mm டிஸ்க் 240 mm டிஸ்க் 153 mm டிரம்
பாதுகாப்பு டூயல் சேனல் ஏபிஎஸ் டூயல் சேனல் ஏபிஎஸ் டூயல் சேனல் ஏபிஎஸ்
முன் டயர் 100/90 – 19 90/90 – 19 90/90 – 19
பின் டயர் 130/80 – 18 110/90 – 18 120/80 – 18

விலை ஒப்பீடு

மூன்று மாடல்களில் ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 350 மாடலின் சிங்கிள் சேனல் ஏபிஎஸ் ரூ.1.45 லட்சத்தில் தொடங்குகின்றது.

ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 350 ரூ.1.45 – ரூ.1.54 லட்சம் வரை
பெனெல்லி இம்பீரியல் 400 ரூ.1.69 லட்சம்
ஜாவா கிளாசிக் ரூ. 1.64 லட்சம்

கொடுக்கப்பட்டுள்ள விலை எக்ஸ்ஷோரூம் ஆகும்.

இந்திய சந்தையை பொறுத்தவரை என்ஃபீல்டு மற்றும் ஜாவா என இரு நிறுவனங்களும் தனித்துவமான ரசிகர் பட்டாளத்தை கொண்டிருக்கின்றது. இருந்தபோதும் ராயல் என்ஃபீல்டின் கிளாசிக் மாடல் சந்தையின் முதன்மையான மாடலாக தொடர்ந்து விளங்கி வருகின்றது. குறிப்பாக இந்நிறுவனத்தின் மிக வலுவான டீலர் நெட்வொர்க் பலமாக அமைந்துள்ளது. ஜாவா நிறுவனம் தன்னுடைய டீலர்கள் மற்றும் டெலிவரியை உயர்த்த வேண்டிய நிலையில் உள்ளது. இம்பீரியல் 400 முதற்கட்ட வரவேற்பினை பெற்றுள்ளது. ஆனால் தொடர்ந்து கிளாசிக் மாடலை எதிர்கொள்ள கடுமையாக போராட வேண்டியிருக்கும்.

Exit mobile version