Automobile Tamilan

நான்கு பைக்குகளை இந்தியாவில் வெளியிட்ட பிரிக்ஸ்டன் மோட்டார்சைக்கிள்ஸ்

Brixton crossfire

இத்தாலியை தலைமை இடமாக கொண்டுள்ள பிர்க்ஸ்டன் பிராண்ட் ஆனது தற்பொழுது சீனா நிறுவனத்தின் கட்டுப்பாட்டில் உற்பத்தி செய்யப்பட்டு வருகின்றது. பிரிக்ஸ்டன் நிறுவனம் இந்தியாவில் மோட்டோஹாஸ் என்ற நிறுவனத்துடன் இணைந்து தற்பொழுது 4 பைக்குகளை அறிமுகம் செய்துள்ளது. 500சிசி பிரிவில் அறிமுகம் விலையின் ஆரம்ப விலை ₹4, 74,000 முதல் துவங்கி அதிகபட்சமாக ரூபாய் 9 லட்சத்து 11 ஆயிரம் முறை விற்பனை செய்யப்படுகின்றது.

Brixton Crossfire 500X

ரூ.4,74,000 விலையில் துவங்குகின்ற ரெட்ரோ ரோடுஸ்டெர் வகையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள கிராஸ்ஃபயர் 500X மாடலில் 486 சிசி ட்வின் சிலிண்டர் எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. எஞ்சின் அதிகபட்சமாக 47.6 ஹெச்பி பவர் மற்றும் 43 என்எம் டார்க்கினை வெளிப்படுத்துகின்றது. குறிப்பாக இந்த மாடல் மிக நேர்த்தியான ஸ்டைலிங் அம்சங்களுடன் முழுமையான எல்இடி லைட் மற்றும் டிஸ்க் ப்ரேக் உடன் டூயல் சேனல் ஏபிஎஸ் போன்றவை எல்லாம் பெற்று இருக்கின்றது.

Brixton Crossfire 500XC

கிராஸ்ஃபயர் 500X அடிப்படையான கிராஸ்ஃபயர் 500XC ஸ்கிராம்பளர் ரக மாடல் பல்வேறு அம்சங்களை ஒரே மாதிரியாக பெற்றுள்ளது எஞ்சின் உட்பட ஆனால் இந்த மாடலில் முன்புறத்தில் 19 அங்குல வீல் பெற்றுள்ளதால் மிக நேர்த்தியான அட்வென்ச்சர் பயணங்களுக்கும் ஏற்ற வகையில் அமைந்திருப்பதுடன் கூடுதலான இருக்கை உயரம் கொண்டிருப்பது சிறப்பாக அமைந்திருப்பகின்றது. இந்த ஸ்க்ராம்பளர் வகையின் விலை ரூ. 5,19,000 ஆக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

Brixton crossfire

Brixton Cromwell 1200

அடுத்து 1200 சிசி சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள க்ரோம்வெல் 1200 மாடல் இந்தியாவின் மிகக் குறைந்த விலை ட்வின் சிலிண்டர் 1200 சிசி இன்ஜின் மாடலாக விளங்குகின்றது இதனுடைய ஆரம்ப விலை 7,84,000 ஆக துவங்குகின்றது.

ரெட்ரோ ஸ்டைல் மோட்டார் சைக்கிள் மாடலாக விளக்குகின்ற இந்த மாடலில் 83 எச்பி பவர், 108 என்எம் தார் வெளிப்படுத்துகின்ற நிலையில் முழுமையான எல்இடி லைட் கொடுக்கப்பட்டு க்ரூஸ் கண்ட்ரோல் டிஎஃப்டி கிளஸ்டர் போன்றவை எல்லாம் பெற்று இருக்கின்றது.

Brixton Cromwell 1200X

அடுத்தது மாடல் ஏற்கனவே உள்ள க்ரோம்வெல் 1200 மாடலின் ஸ்கிராம்பளர் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த மாடலிலும் ஆஃப் ரோடு சாகசங்களுக்கு ஏற்ற வகையிலான டயர் கொடுக்கப்பட்டு சற்று கூடுதலான இருக்கை உயரம் மற்றும் டயர் உள்ளிட்டவற்றில் மாறுதல்கள் கொண்டுள்ளது.

பிரிக்ஸ்டன் க்ரோம்வெல் 1200X விலை ரூ,9,11,000 (அனைத்தும் எக்ஸ்ஷோரூம் விலை)

முதற்கட்டமாக சென்னை,பெங்களூரு, கோவா, கோலாப்பூர், தானே, பூனே, ஹைதராபாத் மற்றும் அகமதாபாத் போன்ற எட்டு நகரங்களில் அடுத்த ஆண்டின் இறுதிக்குள் Motohas டீலர்களை துவங்க உள்ள இந்த நிறுவனம் படிப்படியாக பல்வேறு நகரங்களில் டீலர்களை விரிவுபடுத்துவது திட்டமிட்டு இருக்கின்றது.

Exit mobile version