விரைவில்.., பிஎஸ்6 டிவிஎஸ் ஸ்டார் சிட்டி பிளஸ் வெளியாகிறது

tvs star city plus bs6

டிவிஎஸ் மோட்டார் நிறுவனம், தனது அப்பாச்சி ஆர்ஆர் 310 உட்பட பிஎஸ்6 என்ஜினை பெற உள்ள ஸ்டார் சிட்டி பிளஸ் பைக்கை விற்பனைக்கு வெளியிட உள்ளது. விற்பனையில் உள்ள மாடலை விட ரூ.8,000 வரை விலை உயர்த்தப்பட உள்ளது.

வீடியோ வடிவில் வெளியிடப்பட்டுள்ள டீசரில் எல்இடி ஹெட்லைட் பெறுவதனை உறுதி செய்துள்ளது. இந்த மாடலின் ஹெட்லைட் வைசர், ரியர் வியூ மிரர் போன்றவை புதுப்பிக்கப்பட்டிருக்கும். புதிய ஸ்டார் சிட்டி பிளஸ் மாடலில் இன்ஜின் கில் சுவிட்ச், ஸ்டார்ட் ஸ்டாப் செயல்பாடு மற்றும் புதுப்பிக்கப்பட்ட செமி டிஜிட்டல் கிளஸ்டர் போன்ற கூடுதல் அம்சங்களைப் பெறலாம் என எதிர்பார்க்கலாம்.

இந்த பைக்கின் முக்கியமான மாற்றமாக இருக்கப் போகிறது பிஎஸ்6 ஆதரவுக்கு ஏற்ப எஃப்ஐ பெற்ற என்ஜின் ஆகும். தற்போது, விற்பனையில் உள்ள மாடல் 109 சிசி, ஏர்-கூல்ட் என்ஜின் மூலம் இயக்கப்பட்டு 8.3 பிஹெச்பி பவர் மற்றும் 8.7 என்எம் டார்க் வெளிப்படுத்தும். இந்த மாடலின் முன்புறத்தில் டெலிஸ்கோபிக் ஃபோர்க் மற்றும் பின்புறத்தில் இரட்டை ஷாக் அப்சார்பர் கொண்டிருக்கும். இருபக்க டயர்களிலும் டிரம் பிரேக் மற்றும் முன்புற டயரில் டிஸ்க் பிரேக் கொண்ட மாடல் என இரு விதமான வேரியண்டில் கிடைக்க உள்ளது.

விற்பனையில் உள்ள மாடலை விட ரூ.6,000 முதல் ரூ.8,000 வரை விலை உயர்த்தப்படும் என்பதனால் சமீபத்தில் விற்பனைக்கு வந்த ஹெச்எஃப் டீலக்ஸ், ஹீரோ ஸ்ப்ளெண்டர் ஸ்மார்ட் போன்ற பிஎஸ்6 மாடல்களை எதிர்கொள்ள உள்ளது.

Exit mobile version