ரூ.1.17 லட்சத்தில் பிஎஸ்6 பஜாஜ் பல்சர் 220F விற்பனைக்கு வெளியானது

cbe68 bajaj pulsar 220f

பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் பல்சர் 220F பைக்கின் பிஎஸ்6 மாடல் விலை ரூபாய் 1.17 லட்சத்தில் விற்பனைக்கு வெளியிடப்பட்டுள்ளது. முந்தைய பிஎஸ்4 பைக்கை விட ரூ.8,900 வரை விலை உயர்ந்துள்ளது.

220cc ஆயில் கூல்டு என்ஜின் பெற்று 20.5 hp பவர் மற்றும் 19Nm டார்க் வெளிப்படுத்துகின்றது. இந்த என்ஜின் 5 ஸ்பீடு கியர்பாக்ஸூடன் இணைக்கப்பட்டுள்ளது. பஜாஜ் பல்சர் 220F டூயல் புரொஜெக்டர் ஹெட்லேம்ப், செமி-டிஜிட்டல் இன்ஸ்டுரூமென்ட் கிளஸ்ட்டர் மற்றும் எல்இடி டெயில் லேம்ப் போன்றவை இடம் பெற்றுள்ளன.

புதிய மாடலில் முன்புறத்தில் இப்போது 280 மிமீ டிஸ்க் பிரேக் இணைக்கப்பட்டுள்ளது. முன்பாக இது 270 மிமீ ஆக இருந்தது. முன்புறத்தில் 280 மிமீ டிஸ்க் மற்றும் பின்புறத்தில் 230 மிமீ டிஸ்க் பிரேக் உடன் சிங்கிள் சேனல் ஏபிஎஸ் பிரேக் நிரந்தர அம்சமாக இணைக்கப்பட்டிருக்கின்றது. முன்புறத்தில் டெலிஸ்கோபிக் ஃபோர்க் மற்றும் பின்புறத்தில் டூயல் ஷாக் அப்சார்பர் பெற்றுள்ளது.

Exit mobile version