புதிய 113.2சிசி FI என்ஜின்., பிஎஸ் 6 ஹீரோ ஸ்ப்ளெண்டர் ஐஸ்மார்ட் பைக்கின் விபரம் வெளியானது

Hero Splendor iSmart

அடுத்த சில வாரங்களில் விற்பனைக்கு வரவுள்ள புதிய ஹீரோ ஸ்ப்ளெண்டர் ஐஸ்மார்ட் பிஎஸ் 6 மாசு உமிழ்வுக்கு இணையான என்ஜின் விபரம் மற்றும் பவர் உட்பட வாகனத்தின் நீளம் அதிகரிக்கப்பட்டுள்ளதை உறுதி செய்யும் வகையிலான முக்கிய ஆவணம் ஒன்று கசிந்துள்ளது.

ஏப்ரல் 1, 2020 முதல் இந்தியாவில் பாரத் ஸ்டேஜ் 6 அல்லது பிஎஸ் 6 மாசு உமிழ்வுக்கு இணையான வாகனங்கள் மட்டும் விற்பனைக்கு அனுமதி அளிக்கப்பட உள்ளதால், பல்வேறு நான்கு சக்கர வாகனங்களில் பிஎஸ் 6 என்ஜின் இடம்பெற தொடங்கி விட்ட நிலையில், ஹோண்டா ஆக்டிவா 125 மாடலில் முதன்முறையாக பிஎஸ் 6 என்ஜின் பொருத்தப்பட்டு விற்பனைக்கு கிடைக்க தொடங்கியுள்ளது.

பிஎஸ் 4 ஸ்ப்ளெண்டர் ஐஸ்மார்ட்டில் 9.3hp பவரை வெளிப்படுத்தும் 109.25சிசி என்ஜின் பொருத்தபட்டிருந்த நிலையில், இதற்கு மாற்றாக 113.2 சிசி என்ஜின் இடம்பெற உள்ளது. முந்தைய என்ஜினுக்கு முற்றிலும் மாற்றறாக புதிய FI என்ஜின் உருவாக்கப்பட்டிருக்கலாம். இந்த என்ஜின் அதிகபட்சமாக 9.0 ஹெச்பி (6.73Kw) பவரை தொடர்ந்து 7500 ஆர்பிஎம் சுழற்சியில் வழங்குகின்றது. ஆனால் இதன் பவர் முந்தைய மாடலை விட 0.3 ஹெச்பி வரை குறைக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த மாடலின் டார்க் விபரம் கிடைக்கவில்லை.

மேலும், புதிய ஐஸ்மார்ட் பைக்கின் வீல்பேஸ் உட்பட நீளம், மற்றும் உயரம் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த மாடலில் இரு டயர்களிலும் டிரம் பிரேக் மற்றும் டிஸ்க் பிரேக்குடன் கூடிய டிரம் என இரண்டு விதமான வேரியண்டுகள் கிடைக்க உள்ளது.

பிஎஸ் 6 மாசு உமிழ்வுக்கு இணையான FI என்ஜின், சிறிய அளவிலான ஸ்டைலிங் மாற்றங்கள் மற்றும் புதிய பாடி கிராபிக்ஸ் உட்பட சில மாற்றங்களை கொண்டிருக்கும் என்பதனால் இந்த பைக்கின் விலை ரூ.6,000 முதல் ரூ.7,000 வரை உயர்த்தப்படலாம். ஹீரோவின் பிஎஸ்6 அறிமுகம் குறித்து எந்த உறுதியான தகவலும் கிடைக்கவில்லை.

Exit mobile version