Site icon Automobile Tamilan

வரும் 20ம் தேதி வெளியாகிறது கிளீவ்லேண்ட் ஏஸ் டீலக்ஸ்

கிளீவ்லேண்ட் சைக்கிள்வர்க்ஸ், தனது ஏஸ் டீலக்ஸ் மோட்டார் சைக்கிள்களை வரும் 20ம்தேதி இந்தியாவில் அறிமும் செய்ய உள்ளது. இதை தொடர்ந்து மிசபைட் மோட்டார் சைக்கிள்கலை வரும் அக்டோபர் மற்றும் நவம்பர் மாத்தில் அறிமுகம் செய்யவும் திட்டமிட்டுள்ளது. கிளீவ்லேண்ட் சைக்கிள்வர்க்ஸ், தனது மாடல்கலை ஆட்டோ எக்ஸ்போ 2018 காட்சிபடுத்தியதுடன், இந்திய மார்கெட்டில் ஜூன் மாத்தில் விற்பனிக்கு கொண்டு வர திட்டமிட்டு இருந்தது. பின்னர் இது அக்டோபர் மாதத்திற்கு தள்ளி வைக்கப்பட்டது.

இந்த புதிய கிளீவ்லேண்ட் ஏஸ் டீலக்ஸ் மோட்டார் சைக்கிளின் அறிமுக விலையாக 2.2 லட்சம் முதல் 2.5 லட்ச ரூபாய் (எக்ஸ் ஷோ ரூம் விலை இந்தியாவில்) இருக்கும் என்று மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. தென்னிந்தியாவில் கூடுதலாக, 10 டீலர்ஷிப்களை திறக்கவும் இந்த நிறுவனம் முடிவு செய்துள்ளது. இதுமட்டுமின்றி இந்த மோட்டார் சைக்கிள்களை ஆன்லைனில் விற்பனை செய்யவும் திட்டமிட்டுள்ள இந்த நிறுவனம், இதுகுறித்து தகவல்களை வெளியிடவில்லை.

சீனாவில் இருந்து மோட்டார் சைக்கிள்களை இறக்குமதி செய்யும் இந்த நிறுவனம், புனேவில் உள்ள தனது தொழிற்சாலையில் அசம்பிளிங் பணிகளையும் செய்து வருகிறது. உள்ளூர் மோட்டார் சைக்கிள்களின் விலையை ஒப்பிடும் போது, இந்த பைக்குகளின் விலை அதிகமாக உள்ளது. இருந்தபோதும், எதிர்காலத்தில் தனது தயாரிப்புகளில் 30 முதல் 40 சதவிகிதம் உள்ளூர் மயமாக்க இந்த நிறுவனம் முடிவு செய்துள்ளது.

கிளீவ்லேண்ட் ஏஸ் டீலக்ஸ் மோட்டார் சைக்கிள்கள், ரெட்ரோ ஸ்டைலில் உருவாக்கப்பட்டுள்ளதுடன், 229cc, சிங்கிள் சிலிண்டர், ஏர்-கூல்டு இன்ஜின், 15.4bhp ஆற்றல் மற்றும் 16Nm டார்க்யூ கொண்டதாக இருக்கும், இத்துடன் 5-ஸ்பீட் கியர்பாக்ஸ் மற்றும் சதுர வடிவிலான சிங்கள் டவுன்டியுப் பிரேம் சஸ்பென்ஸ்சன் USD போர்க் மற்றும் டுயல் ஷாக்-அப்சார்பர்கலை கொண்டுள்ளது. இது எடைக்கு ஏற்ற வகையில் ஐந்து வகையான அட்ஜெட்மென்டுகளை செய்து கொள்ளும் வசதி கொண்டது. இந்த மாடல் டிவிஎஸ் அப்பாச்சி ஆர்ஆர் 310 மற்றும் கேடிஎம் 250 டூயூக் மாடல்களுக்கு போட்டியாக இருக்கும்.

இந்த மோட்டார் சைக்கிள் மட்டுமின்றி, நிறுவனம் தனது ஏஸ் ஸ்கிராம்லர் மற்றும் ஏஸ் கஃபே மோட்டார் சைக்கிள்களையும் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. இந்த மோட்டார் சைக்கிள்கள் தற்போது ARAI சர்டிபிகேட் பெற உள்ளன. இது மட்டுமின்றி மேற்குறிய மாடல்களில், நிறுவனம் சார்பில் 125cc மற்றும் 450cc மோட்டார் சைக்கிள்களாக இந்திய மார்க்கெட்டின் தேவைக்கேற்ப அறிமுகம் செய்ய முடிவு செய்துள்ளது

Exit mobile version