ரூ.15.20 லட்ச விலையில் அறிமுகமானது டுகாட்டி 959 பணிகளே கோர்ஸ்

டுகாட்டி 959 பணிகளே கோர்ஸ் மோட்டார் சைக்கிள்கள் இந்தியாவில் 15.20 லட்ச ரூபாயில் விற்பனை செய்யப்பட உள்ளது. (எக்ஸ் ஷோரூம் விலை)

இந்த சிறப்பு பதிப்பு டுகாட்டி 959 பணிகளே கோர்ஸ் மோட்டார் சைக்கிள்களில், மோட்டோஜிபி நிறங்களில், டெஸ்மோசிடிய ஜிபி 18 மோட்டார் சைக்கிள்களாக வெளியாகியுள்ளது. இந்த மோட்டார் சைக்கிள்கள் ஆண்ட்ரியா டோவிசியாவோ மற்றும் ஜோர்ஜ் லாரென்சோ ஆகியோரால் ஓட்டப்பட்டவை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த சிறப்பு பதிப்பு வெர்சன்கள், வாடிக்கையாளர்களை கவரும் வகையில் பினிசிங் செய்யப்பட்ட பிளாக் வீல்களுடன் புதிய பெயின்ட் ஸ்கீமில் வெளி வந்துள்ளது. டுகாட்டி 959 பணிகளே கோர்ஸ் மோட்டார் சைக்கிள்களுக்கான புக்கிங் இன்று முதல் தொடங்கப்பட்டுள்ளது. இந்த வகை மோட்டார் சைக்கிள்கள், ஸ்டாண்டர்ட் வெர்சன் மோட்டார் சைக்கிள்களை விட 67,000 ரூபாய் அதிகமாக இருக்கும்.

இந்த சிறப்பு பதிப்பு டுகாட்டி 959 பணிகளே கோர்ஸ், குறித்து பேசிய டுகாட்டி இந்தியா உயர் அதிகாரி செர்ஜி கேநோவாஸ்,  பணிகளே வகைகள் கண்டிப்பாக டுகாட்டி சூப்பர்பைக்-ஆக இருக்கும், இதில் சூப்பர்பைக்களுக்கான வசதிகள், சூப்பர்பைக்கில் பயணம் செய்யும் போது கிடைக்கும் அனுபவம் இதில் பயணம் செய்யும் போதும் கிடைக்கும். 959 பணிகளே வகைகளில் அதிநவீன எலக்ட்ரானிக் பேக்கேஜ்கள் இடம் பெற்றுள்ளன. இது இந்த பைக்கை ஓட்டுபவர்களுக்கு அவர்களது லிமிட்டை அறிந்து கொள்ள அனுமதிக்கும். டுகாட்டி 959 பணிகளே கோர்ஸ் மோட்டார் சைக்கிள்கள் தனித்துவம் கொண்ட பெயின்ட் ஸ்கீம் உடன் கவர்ந்திழுக்கும் கலர்களில் எங்களது மோடோஜிபி பைக்காகவும், டெஸ்மோசிடிக்சி ஜிபி 18 போன்றும் இருக்கும் என்றார்.

பெயின்ட்டை தவிர்த்து, இந்த மோட்டார் சைக்கிள்களில் எந்த மெக்கனிக்கல் மாற்றமும் செய்யப்படவில்லை. இந்த சூப்பர்ஸ்போர்ட், யுரோ 4 கம்பிளேண்ட் 955cc சூப்பர்குஅட்ரா இன்ஜினை கொண்டுள்ளது. இந்த இன்ஜின்கள் மூலம் 10,500rpm ல் 150bhp ஆற்றலுடனும் 102 Nm உச்சபட்ச டார்க்யூவையும் கொண்டுள்ளது. இந்த இன்ஜின் 6-ஸ்பீட் கியர் பாக்ஸ் உடன் இணைக்கப்பட்டுள்ளது.

சர்வதேச வெர்சனை போன்று இல்லாமல், டுகாட்டி 959 பணிகளே கோர்ஸ் மோட்டார் சைக்கிள்களில் முழுவதும் அட்ஜெட்செய்து கொள்ளும் ஓஹ்ளிஸ் NI30 43mm ஃப்ரோக் மற்றும் பின்புறத்தில் TTX36 மோனோஷாக் மற்றும் அட்ஜெட்செய்து கொள்ளும் ஓஹ்ளிஸ் ஸ்டீரிங் டெம்பர்களும் பொருத்தப்பட்டுள்ளது. இந்த மோட்டார் சைக்கிள்களில், அக்ரபோவிக் நிறுவனத்திடம் இருந்து பெறப்பட்ட லித்தியம் பேட்டரி மற்றும் டைகனியம் சைலன்ஸ்ர்கள் ஆகியவை இடம் பெறாது. 2.26kg எடை கொண்ட இவை மொத்த மோட்டார் சைக்கிளின் எடை குறைக்கும் நோக்கில் சர்வதேச வெர்சனில் நீக்கப்பட்டது.

இந்த மாடலில் இடம் பெற்றுள்ள எலக்ட்ரானிக் வசதிகளை பொறுத்தவரை, இரண்டு சேனல் Bosch ABS 9MP, டுகாட்டி டிராக்ஷன் கண்ட்ரோல், டுகாட்டி குயிக் ஷிப்ட், என்ஜின் பிரேக் கண்ட்ரோல், ரைடு-பை-வயர் உள்ளிட்ட பல வசதிகள் இடம் பெற்றுள்ளன. டுகாட்டி 959 பணிகளே கோர்ஸ் மோட்டார் சைக்கிள்களில், ரேஸ், ஸ்போர்ட் மற்றும் வெட் என மூன்று டிரைவிவ் மோடுகள் உள்ளன.

ரைடிங்கில் உங்கள் திறன்களை அதிகரித்து கொள்ள, டுகாட்டி சமீபத்தில் “டுகாட்டி ரைட்டிங் அனுபவம் (DRE (Ducati Riding Experience))-ஐ வெளியிட்டள்ளது. வாடிக்கையாளர்கள் கவர வரும் அக்டோபர் 13 மற்றும் 14ம் தேதிகளில் நடக்கும் விழாவில் சிறப்பு பதிப்பான டுகாட்டி 959 பணிகளே கோர்ஸ் மோட்டார் சைக்கிள் காட்சிக்கு வைக்கப்பட உள்ளது.

Share