Automobile Tamilan

டுகாட்டி ஹைப்பர்மோட்டார்டு 698 மோனோ பைக் அறிமுகமானது

Ducati Hypermotard 698 Mono Unveiled

சூப்பர்குவாட்ரோ மோனோ ஒற்றை சிலிண்டர் என்ஜின் பெற்ற முதல் மாடலாக டுகாட்டி ஹைப்பர்மோட்டார்டு 698 மோனோ பைக் அறிமுகம் செய்யப்பட்டுள்ள நிலையில், விரைவில் விற்பனைக்கு வெளியாக உள்ளது.

30 ஆண்டுகளுக்கு பின்னர் நவீன காலத்துக்கு ஏற்ப மாறுதல்களை பெற்ற ஒற்றை சிலிண்டர் என்ஜினை டுகாட்டி சூப்பர் பைக் தயாரிப்பு நிறுவனம் கொண்டு வந்துள்ளது.

Ducati Hypermotard 698 Mono

டுகாட்டி ஹைப்பர்மோட்டார்ட் மோனோ பைக்கில் ஸ்டாண்டர்டு மற்றும் RVE என இரண்டு வேரியண்டுகள் கொண்டு வரப்பட்டுள்ளது. விற்பனையில் கிடைக்கின்ற பெரிய ஹைப்பர்மோட்டார்டு பைக்கின் வடிவத்தை சார்ந்த சூப்பர்மோட்டோ வடிவமைப்பினை பெறுகின்றன.

ஒற்றை சிலிண்டர் சூப்பர் குவாட்ரோ மோனோ 659cc லிக்யூடு கூல்டு என்ஜின் அதிகபட்சமாக 77.5hp பவர் மற்றும் 63Nm டார்க் வெளிப்படுத்துகின்றது. கூடுதல் பவரை  இது டெர்மிக்னோனி ரேசிங் எக்ஸாஸ்டுடன் இணைக்கப்படும் பொழுது அதிகபட்சமாக 84.5hp பவர் மற்றும் 67Nm டார்க் வெளிப்படுத்தும் என கூறப்பட்டுள்ளது. சிலிப்பர் மற்றும் அசிஸ்ட் கிளட்ச் கொண்ட 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது. மேலும், பை டைரக்‌ஷனல் க்விக் ஷிஃப்டர் ஆனது RVE வேரியண்ட் பெற்றுள்ளது.

ஹைப்பர்மோட்டார்ட் 698 மோனோ பைக்கில் எல்இடி ரன்னிங் விளக்குடன் கூடிய ஒற்றை ஹெட்லைட்  மற்றும் எல்இடி டர்ன் இண்டிகேட்டர்மற்றும் நக்கிள் கார்டுகள் ஆகியவற்றைக் முன்பக்கத்தில் கொண்டுள்ளது.

சஸ்பென்ஷன் அமைப்பில் Marzocchi 45mm முழுமையாக அட்ஜெஸ்ட் செய்யக்கூடிய யூஎஸ்டி ஃபோர்க்கு 215 மிமீ பயணத்துடன் மற்றும் 240 மிமீ பயணிக்கின்ற சாக்ஸ் பின்புற மோனோ ஷாக் அப்சார்பர் உள்ளது.

17-இன்ச் வீல் பொதுவாக 120/70 முன்புற டயர் மற்றும் 160/60 பின்புற டயர் என இரண்டிலும் டயாப்லோ ரோஸ்ஸோ 4 டயர்கள் உள்ளது. இதன் பிரேக்கிங் அமைப்பில் 330 மிமீ டிஸ்க் மற்றும் 245 மிமீ பின்புற டிஸ்க் உடன் இரட்டை சேனல் ஏபிஎஸ் உள்ளது.

டுகாட்டியின் விரிவான அட்வான்ஸ்டு IMU உடன் லான்ச் கன்ட்ரோல், இன்ஜின் பிரேக் கன்ட்ரோல், அட்ஜெஸ்ட் செய்யக்கூடிய வீலி கண்ட்ரோல், டிராக்ஷன் கன்ட்ரோல், 4-லெவல் ஏபிஎஸ், கார்னரிங் ஏபிஎஸ் மற்றும் வீலி அசிஸ்ட் ஃபங்ஷனில் விருப்பமான டுகாட்டி செயல்திறன் மென்பொருள் பேட்ச் உள்ளது.

இந்தியாவில் டுகாட்டி ஹைப்பர்மோட்டார்ட் மோனோ 698 அறிமுகம் செய்யப்படுவது குறித்து எந்த உறுதியான தகவலும் இல்லை.

Exit mobile version