Automobile Tamilan

ஆம்பியர் எலக்ட்ரிக் ரூ.124 கோடியை திரும்ப தர உத்தரவு

ampere magnus ex e scooter

கிரீவ்ஸ் காட்டன் நிறுவனத்தின் கிரீவ்ஸ் எலக்ட்ரிக் மொபிலிட்டி கீழ் செயல்படும் ஆம்பியர் எலக்ட்ரிக் நிறுவனம் FAME-II தொடர்பான மோசடி புகாரில் சிக்கியுள்ளதால் ரூ.124 கோடி மற்றும் அதற்கு உண்டான வட்டியுடன் திரும்ப வழங்க இந்திய கனரக தொழில்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

Ampere FAME-II Refund

முன்பே, இது தொடர்பான புகாரில் ஓகினவா, ஹீரோ எலக்ட்ரிக் நிறுவனங்ளை போல ஆம்பியர் நிறுவனமும் FAME  மானியம் பெற உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட உதிரிபாகங்கள் பயன்படுத்தப்பட்டதாக போலியான தகவலை வழங்கிய காரணத்துக்காக ஹீரோ எலக்ட்ரிக் மற்றும் ஓகினாவா ஆட்டோடெக் இரு மானியம் வழங்குவது தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.

இதன் விளைவாக, இரு நிறுவனங்களிடம் இருந்து 249 கோடி ரூபாயை மீட்டெடுக்க இந்திய அரசு கோரியது. ஓகினவா ஆட்டோடெக் நிறுவனத்திடம் இருந்து ரூ.116 கோடி அபராதமும் மற்றும் ஹீரோ எலக்ட்ரிக் நிறுவனத்திடம் இருந்து 133 கோடி அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.

தற்பொழுது இந்த வரிசையில் இணைந்துள்ள (phased manufacturing programme) கிரீவ்ஸ் எலக்ட்ரிக் மொபிலிட்டியிடம் இருந்து 124 கோடி அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.

மற்ற நிறுவனங்கள் வாடிக்கையாளர்களிடம் கூடுதல் கட்டணம் வசூலித்த புகாரில் சிக்கி பணத்தை திரும்ப வாடிக்கையாளர்களுக்கு வழங்குகின்றது. அவற்றின் பட்டியல்

ஏதெர் எனெர்ஜி – ரூ.140 கோடி

ஓலா எலக்ட்ரிக் – ரூ.130 கோடி

டிவிஎஸ் மோட்டார் –  ரூ.15.61 கோடி

ஹீரோ வீடா – ரூ.2.23 கோடி

அடுத்தடுத்து, மற்ற நிறுவனங்களான ஒகாயா EV, ஜிதேந்திரா நியூ EV டெக், ரிவோல்ட் இன்டெலிகார்ப், கைனெடிக் கிரீன் எனர்ஜி, அவான் சைக்கிள், லோஹியா ஆட்டோ இண்டஸ்ட்ரீஸ், துக்ரல் எலக்ட்ரிக் பைக்குகள் மற்றும் விக்டரி எலக்ட்ரிக் வாகனங்கள் இன்டர்நேஷனல் போன்றவை ஆய்வில் உள்ளது.

Exit mobile version