Automobile Tamilan

2024 EICMAவில் ராயல் என்ஃபீல்டின் முதல் எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிள் அறிமுகம்

royal enfield Flying Flea ev teased

நடுத்தர மோட்டார் சைக்கிள் சந்தையில் பிரபலமாக உள்ள கிளாசிக் பைக் தயாரிப்பாளரின் முதல் ராயல் என்ஃபீல்டு எலெக்ட்ரிக் பைக் மாடல் நவம்பர் 4ஆம் தேதி இத்தாலி நாட்டின் மிலன் நகரில் துவங்க உள்ள EICMA 2024 அரங்கில் வெளிடப்பட உள்ளதை உறுதி செய்யும் டீசர் வெளியாகியுள்ளது.

Royal Enfield Electric

கடந்த ஆண்டு EICMA கண்காட்சியில் முதன்முறையாக எலெக்ட்ரிக் பெட் ஹிமாலயன் பைக்கினை காட்சிப்படுத்திய நிலையில் நடப்பு ஆண்டில் முதல் எலெக்ட்ரிக் பைக் Flying Flea EV என்ற பெயரில் வெளியிடப்பட உள்ளது. ஏற்கனவே வரவுள்ள மாடலின் டிசைன் காப்புரிமையை பெற்றுள்ளது.

சமீபத்தில் வெளியிடப்பட்ட டீசர் மூலம் பாராசூட் பலூனில் பைக் கொண்டு வரும் வகையில் டீசர் அமைந்துள்ளதால் உலகப்போரில் ராயல் என்ஃபீல்டு தயாரிப்பில் இலகுவான எடையில் தயாரிக்கப்பட்ட ஃபிளையிங் ஃபிளே மாடலின் தோற்றத்தை நவீன தலைமுறைக்கு ஏற்றதாக வடிவமைத்திருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

உற்பத்தி நிலை அல்லது கான்செப்ட் மாடலாக காட்சிக்கு வரவுள்ள அந்நிறுவனத்தின் முதல் எலெக்ட்ரிக் பைக் 2025 ஆம் ஆண்டின் இறுதி அல்லது 2026 ஆம் ஆண்டின் துவக்க மாதங்களில் சந்தைக்கு எதிர்பார்க்கலாம்.

Exit mobile version