Automobile Tamilan

ஃபிளையிங் ஃபிளே C6, S6 சோதனை ஓட்ட படங்கள் வெளியானது

ராயல் என்ஃபீல்டு எலக்ட்ரிக்

2026 ஆம் ஆண்டின் மத்தியில் விற்பனைக்கு வரவிருக்கும் ஃபிளையிங் ஃபிளே C6 மற்றும் ஸ்கிராம்ப்ளர் ரக S6 என இரண்டும் லடாக்கில் சாலை சோதனை ஓட்டத்தில் ஈடுபடுகின்ற புகைப்படங்கள் வெளியானது.

ராயல் என்ஃபீல்டு நிறுவன ஃபிளையிங் ஃபிளே எலக்ட்ரிக் பிராண்டின் கீழ் வரவுள்ள கிளாசிக் ரக சி6 மாடல் மிக நேர்த்தியான வகையில் வடிவமைக்கப்பட்டு முன்புறத்தில் கிரிடெர் ஃபோர்க் (Grider Fork) பெற்றதாக அமைந்துள்ளது.

வட்ட வடிவ எல்இடி லைட்டிங் உட்பட பெரும்பாலான கனெக்ட்டிவிட்டி வசதிகளை ஸ்னாப்டிராக்ன் மூலம் ஓஎஸ் வழங்கப்பட்டு புளூடூத் வழியாக ஸ்மார்ட்போன் அப்ளிகேஷன் மூலம் டச்ஸ்கிரீன் TFT கிளஸ்ட்டர் உடன் இணைக்க முடியும். ஃபிளையிங் ஃபிளே C6 மாடலில் டிராக்‌ஷன் கட்டுப்பாட்டு உடன் கார்னரிங் ஏபிஎஸ் வசதியையும் கொண்டிருக்கும்.

C6 மாடலின் அடிப்படையிலான ஆஃப் ரோடு சாகசங்களுக்கு ஏற்றதாக S6 முன்புறத்தில் அப்சைடு டவுன் ஃபோர்க் உடன் ஸ்போக்டூ வீல், செயின் டிரைவ், TFT கிளஸ்டர் உடன் ப்ளூடூத் கனெக்டிவிட்டி ஆப்ஷன் பெற் உள்ளது.

தற்பொழுது வரை பேட்டரி தொடர்பான தகவல்கள் ரேஞ்ச் மற்றும் நுட்ப விபரங்கள் போன்ற எவ்விதமான அடிப்படையான தொழில்நுட்பம் சார்ந்த விபரங்களை ராயல் என்ஃபீல்டு வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

image source – autocarindia.com

Exit mobile version