Automobile Tamilan

கோகோரோ 2 & 2 பிளஸ் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் அறிமுக விபரம்


தாய்வானை தலைமையிடமாக கொண்ட கோகோரோ (Gogoro) நிறுவனம் இந்திய சந்தையில் 2 மற்றும் 2 பிளஸ் இரண்டு எலக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடல்களை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. முன்பாக இந்நிறுவனம் பேட்டரி மாற்றும் நுட்பத்திற்கு ஜைப் எலக்ட்ரிக் (Zypp Electric ) உட்பட ஹீரோ மோட்டோகார்ப் ஆகிய நிறுவனங்களுடன் கூட்டணி அமைத்துள்ளது.

கோகோரோ 2

Gogoro நிறுவனம் இந்திய சந்தையில் விற்பனைக்கு கொண்டு வரவுள்ள இரண்டு ஸ்கூட்டர்களும் மிக சிறப்பான திறன் பெற்றதாக விளங்கும். இந்நிறுவனத்தின் இணையதளத்தில் கோகோரோ 2 சீரிஸ் வகையில் 2 பிரீமியம், 2 பிளஸ் என இரண்டு வேரியண்டும், அடுத்தப்படியாக கோகோரோ சூப்பர்ஸ்போர்ட் என்ற ஸ்கூட்டரும் இடம்பெற்றுள்ளது.

கோகோரோ 2 சீரிஸ்

சமீபத்தில் வெளியான ஆர்டிஓ பதிவு தொடர்பான ஆவணங்களில் குறிப்பிடப்பட்டுள்ள இ-ஸ்கூட்டர்களின் விவரக்குறிப்புகளைப் பற்றி முழுமையாக அறிந்து கொள்ளலாம். Gogoro 2 மாடலில் மோட்டார் 7.2kW பவர் வெளிப்படுத்தும், Plus ஆனது சற்று குறைவான 6.4kW பவரை வெளிப்படுத்துகின்றது.

இரண்டு வேரியண்டுகளும் பொதுவாக மணிக்கு அதிகபட்ச வேகம் 87kmph ஆகும்.

2 மாடல் அதிகபட்சமாக சிங்கிள் சார்ஜில் 85 கிமீ வழங்குவதாக மதிப்பிடப்பட்டுள்ளது. அடுத்து குறைந்த விலை பிளஸ் வேரியண்ட் 94 கிமீ  வரம்பை கொண்டிருக்கும். ஸ்கூட்டரின் மொத்த எடை 273 கிலோ, 1,890 மிமீ நீளம், 670 மிமீ அகலம் மற்றும் 1,110 மிமீ உயரம் ஆகும்.

Gogoro 2 மற்றும் Gogoro 2 Plus என இரண்டு மின் ஸ்கூட்டர் வெளியீட்டு தேதி, விலை மற்றும் இன்னும் பிற அறிவிப்புகள் அடுத்த சில வாரங்களில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகலாம்.

Exit mobile version