தாய்வான் நாட்டைச் சேர்ந்த கோகோரோ நிறுவனம் இந்திய சந்தையில் Zypp எலக்ட்ரிக் நிறுவனத்துடன் இணைந்து டெல்லி மற்றும் தேசிய தலைநகர் பகுதியில் பேட்டரி ஸ்வாப் நுட்பத்தை துவக்கியுள்ளது.
கோகோரோ, இந்தியாவின் ‘EV தளமான Zypp Electric உடன் இணைந்து பேட்டரியை மாற்றும் துவக்கநிலை திட்டத்தை தொடங்கியுள்ளது. குருகிராமில் நான்கு பேட்டரி ஸ்வாப்பிங் நிலையங்களும் டெல்லியில் இரண்டு நிலையங்களும் துவங்கப்பட்டுள்ளது.
மிக வேகமாக வளர்ந்து வரும் இந்தியா EV சந்தை பற்றி கோகோரோ நிறுவனர் மற்றும் CEO, லூக் (Horace Luke) கூறுகையில், “கோகோரோ இந்தியாவில் மின்சார இரு சக்கர போக்குவரத்துக்கான நகர்ப்புற மாற்றத்திற்கான வசதிகளை துரிதப்படுத்துகிறது, மேலும் வணிகங்களின் திறந்த மற்றும் மாறுபட்ட சுற்றுச்சூழல் அமைப்பை வளர்ப்பதில் நாங்கள் கடமைப்பட்டுள்ளோம்.
இந்தியாவில் அணுகக்கூடிய ஸ்மார்ட் மொபிலிட்டியின் புதிய சகாப்தத்தை உருவாக்கும் கோகோரோ பேட்டரி மாற்றுதல் மிகவும் பாதுகாப்பான, நிரூபிக்கப்பட்ட மற்றும் வசதியான சார்ஜிங் தீர்வை வழங்குகிறது.
மின்சார இருசக்கர வாகனங்களுக்கான பேட்டரி மாற்றும் தொழில்நுட்பத்தில் முன்னோடியாக உள்ள கோகோரோ ஏற்கனவே, நாட்டின் முதன்மையான ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்துடன் பேட்டரி ஸ்வாப் நுட்பத்தை பயன்படுத்த கூட்டணி அமைத்துள்ளது.