GST பைக் : டிவிஎஸ் பைக்குகள் விலை குறையும்..!

வருகின்ற ஜூலை 1 ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வரவுள்ள சரக்கு மற்றும் சேவை வரி எனப்படும் ஜிஎஸ்டி வரி விதிப்பின் காரணமாக டிவிஎஸ் பைக்குகள் மற்றும் ஸ்கூட்டர் வாங்கும் வாடிக்கையாளர்கள் பயன்பெறுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

டிவிஎஸ் பைக்குகள்

GST எனப்படும் சரக்குகள் மற்றும் சேவைகள் வரி விதிப்பை தொடர்ந்து பல்வேறு கார் நிறுவனங்கள் சலுகைகளை வாரி வழங்கியிருந்தாலும் மோட்டார் சைக்கிள் நிறுவனங்களில் ராயல் என்ஃபீல்டு, யூஎம் மோட்டார்சைக்கிள் மற்றும் பஜாஜ் ஆட்டோ போன்ற நிறுவனங்கள் சலுகைகளை வழங்கி வருகின்றது.

இந்நிலையில் டிவிஎஸ் தலைமை செயல் அதிகாரி KN ராதாகிருஷ்னன் அவர்கள் கூறியதாவது ;

ஜிஎஸ்டி வரி விதிப்பு நடைமுறை மிகப் பெரிய சீர்திருத்தமாக விளங்கும் என்பதனால், வர்த்தகரீதியாக நடைமுறையில் எளிமையை மேற்கொள்ளும் என்பதனால் வாடிக்கையாளர்கள் ஏராளமான நண்மைகளை அடைவதற்கான சாத்தியக்கூறு உள்ளதாக கூறியுள்ளார்.

மாநிலங்களை பொறுத்து விலை விபரம் மாறுதல் அடையும் என்றாலும்,  பெரும்பாலான மோட்டார் சைக்கிள் நிறுவனங்களின் 350சிசி க்கு குறைவான திறன் கொண்ட எஞ்சின் பெற்ற மாடல்களுக்கு விலை கனிசமாக குறையும் வாய்ப்புகள் உள்ளது.

தற்போது ஜிஎஸ்டி வருகையால் பஜாஜ் ஆட்டோ, ராயல் என்ஃபீலடு ,ஹோண்டா மற்றும் டிவிஎஸ் போன்ற நிறுவனங்களின் மாடல் விலை குறைக்கப்படும் என உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் ஹீரோ, யமஹா, சுசூகி போன்ற நிறுவனங்கள் இதுவரை எந்த அதிகார்வப்பூர்வ அறிவிப்பையும் வெளியிடவில்லை.

350சிசி திறனுக்கு மேற்பட்ட மாடல்களுக்கு மட்டும் 31 % வரி வதிப்பு நடைமுறை அமலுக்கு வருவதனால் சூப்பர் பைக் பிரியர்களுக்கு மட்டுமே ஜிஎஸ்டி சற்று கூடுதல் சுமையாக அமையும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

டிவிஎஸ் நிறுவனம் இந்த வருடத்தில் தனது முதல் ஃபேரிங் செய்யப்பட்ட அப்பாச்சி RR 310S பைக் மாடலை விற்பனைக்கு வெளியிட உள்ளது. இந்த மாடலில் 313சிசி எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளதால் ஜிஎஸ்டி வருகையால் பாதிப்புகள் ஏற்படாது.

Exit mobile version