Automobile Tamilan

ஹீரோ எலெக்ட்ரிக் Eddy ஸ்கூட்டர் விற்பனைக்கு வந்தது

28fcd hero electric eddy price

இந்தியாவின் முன்னணி எலெக்ட்ரிக் இரு சக்கர வாகன தயாரிப்பாளரான ஹீரோ எலெக்ட்ரிக் நிறுவனத்தின் குறைந்த வேகத்தில் பயணிக்கும் Eddy ஸ்கூட்டர் ₹ 72,000 விலையில் விற்பனைக்கு வெளியிடப்பட்டுள்ளது.

அதிகபட்சமாக மணிக்கு 25 கிமீ வேகத்தில் பயணிக்கும் திறனை கொண்டுள்ள எடி ஸ்கூட்டரை ஓட்டுவதற்கு ஓட்டுநர் உரிமம் மற்றும் வாகனப் பதிவெண் பெற வேண்டிய அவசியம் இல்லை.

ஹீரோ எடியின் விரிவான விவரக்குறிப்புகள் விரைவில் நடைபெறும் அறிமுக விழாவில் வெளிப்படுத்தப்படும். முழு பேட்டரி வரம்பு வெளியிடப்படவில்லை என்றாலும், அது சுமார் 50 கிமீ இருக்கும் என நம்புகிறோம்.

ஹீரோ எடி ஸ்கூட்டரில் பயனுள்ள அம்சங்களையும் கொண்டுள்ளது. குறிப்பாக, ஃபைண்ட் மை பைக், இ-லாக், ரிவர்ஸ் மோட் மற்றும் ஃபாலோ மீ ஹெட்லேம்ப்கள் ஆகியவை ஸ்கூட்டரை அணைத்த பின்னரும் சில நொடிகள் விளக்கு எரிந்து கொண்டிருக்கும். ஹீரோ எலெக்ட்ரிக் பைக் நிறுவனம் ஸ்கூட்டரை மஞ்சள் மற்றும் நீலம் ஏன இரண்டு வண்ணங்களில் வழங்குகிறது. ஸ்டைலிங் அடிப்படையில், ஸ்கூட்டர்கள் நேர்த்தியான பாடி பேனல்கள், ஒரு வெளிப்படும் ஹேண்டில்பார் மற்றும் பில்லியன் ரைடருக்கு ஒரு உயரமான பேக்ரெஸ்ட் ஆகியவற்றுடன் வந்துள்ளது.

Exit mobile version