Automobile Tamilan

க்ரூஸ் கன்ட்ரோலுடன் ஹீரோ எலெக்ட்ரிக் ஆப்டிமா HX ஸ்கூட்டர் அறிமுகம்

551da hero optima

இந்தியாவின் முன்னணி எலெக்ட்ரிக் இரு சக்கர வாகன தயாரிப்பாளரான ஹீரோ எலெக்ட்ரிக் நிறுவனம் அறிமுகம் செய்துள்ள புதிய ஆப்டிமா HX ஸ்கூட்டர் மாடலில் க்ரூஸ் கன்ட்ரோல் ஆப்ஷனை பெற்றுள்ளது. இந்த வசதி மிக நேர்த்தியான ஒரு ரைடிங் அனுபவத்தை வழங்கும் வகையில் இந்நிறுவனம் உருவாக்கியுள்ளது.

க்ரூஸ் கன்ட்ரோல் அம்சம் ரைடிங்குக்கு ஏற்ற நிலையான வேகத்தை பராமரிக்க அனுமதிக்கும் வகையில் உருவாக்கப்பட்டு விரும்பிய வேகத்தை பராமரிக்கும் செயல்பாட்டை செயல்படுத்த, க்ரூஸ் கன்ட்ரோல் பட்டனை ரைடர் அழுத்தலாம். இயக்கப்பட்டதும், க்ரூஸ் கன்ட்ரோல் சின்னத்தை பிரதிபலிக்கும்.

மேலும், பிரேக்கிங் அல்லது த்ரோட்டிலை முறுக்குவதன் மூலம் க்ரூஸ் கண்ட்ரோல் வசதி நிறுத்தப்படும். இந்நிறுவனத்தின் டீலர்ஷிப்கள் முழுவதும் திருத்தப்பட்ட FAME 2 மானியத்திற்குப் பிறகு ஹீரோ எலெக்ட்ரிக் ஆப்டிமா HX விலை ₹55,580 (எக்ஸ்-ஷோரூம்) முதல் தொடங்குகிறது.

இந்நிறுவனம் தற்போது 36 சதவீத சந்தைப் பங்கைக் கொண்டுள்ளது. வரவிருக்கும் ஆண்டுகளில்,  ஹீரோ எலெக்ட்ரிக் கனெக்டேட் வாகன உத்தியின் ஒரு பகுதியாக, இன்டர்நெட் ஆஃப் திங்ஸ் (IoT), ஆற்றல் திறன், இணைப்பு மற்றும் பயனர் இடைமுக தயாரிப்பு ஆகியவற்றில் கவனம் செலுத்தும் என்று குறிப்பிட்டுள்ளது.

 

Exit mobile version