Automobile Tamilan

ஹீரோ ஹூராகேன் 440 பைக்கின் அறிமுக விபரம் வெளியானது

xf3r concept

ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் தனது பிரீமியா சந்தையில் அடுத்து 440சிசி என்ஜின் பெற்ற ஹூராகேன் பைக் (Hurikan) மாடலை அட்வென்ச்சர் அல்லது க்ரூஸர் ரக சந்தையில் விற்பனைக்கு வெளியிட வாய்ப்புகள் உள்ளது.

ஹார்லி-டேவிட்சன் X440 என்ஜினை பகிர்ந்து கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகின்ற ஹூராகேன் 440 ஆனது ராயல் என்ஃபீல்டு ஹிமாலயன் 450 அல்லது கிளாசிக் 350, மீட்டியோர் 350 ஆகியவற்றுடன் டிரையம்ப் ஸ்பீடு 400, ஸ்கிராம்பளர் 400X போன்ற மாடல்களுக்கு சவால் விடுக்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Hero Hurikan 440

சந்தையில் கிடைக்கின்ற ஹார்லி எக்ஸ் 440 பைக்கில் இடம்பெற்றிருக்கின்ற என்ஜினை பெற உள்ள ஹூராகேன் பைக் சிங்கிள் சிலிண்டர் ஏர் ஆயில் கூல்டு என்ஜின் 6000 rpm-ல் 27 bhp பவர் மற்றும் 38 Nm at 4000rpm டார்க் வழங்கும். இதில் 6 வேக கியர்பாக்ஸ் கொண்டுள்ளது. எனவே, இந்த என்ஜினை ஹீரோ மோட்டோகார்ப் பயன்படுத்திக் கொள்ள உள்ளது.

வரவிருக்கின்ற புதிய ஹீரோ பைக் பிரீமியம் சந்தையில் வருவது உறுதி செய்யப்பட்டிருந்தாலும், க்ரூஸர் அல்லது அட்வென்ச்சர் என இரண்டு வாய்ப்புகளை தவிர மற்றொன்று ஸ்போர்டிவ் ஆப்ஷனாக அமையலாம்.

250சிசி-750சிசி பிரிவில் உள்ள பிரலமான பைக்குகளுக்கு சவால் விடுக்கும் வகையில் ஹீரோ ஹூராகேன் வரவுள்ளது. மற்றபடி, இந்த பைக் பற்றி எந்த தகவலும் தற்பொழுது இல்லை.  வரும் ஜனவரி 22 ஆம் தேதி எதிர்பாக்கப்படுகின்ற மாடலின் மீடியா டெஸ்ட் டிரைவ் பிப்ரவரி 15 தேதி நடைபெற உள்ளது.

நமக்கு கிடைத்த தகவலின்படி ஹூராகேன் எக்ஸ்ஹாஸ்ட் நோட்டை நமது X தளத்தில் பதிவிட்டுள்ளோம்.

Exit mobile version