Automobile Tamilan

ஹீரோவின் கரீஸ்மா XMR 210 காம்பேட் எடிசன் அறிமுகம் விபரம்.!

karizma combat edition

2024 EICMA கண்காட்சியில் வெளியான ஹீரோ மோட்டோகார்ப் கரீஸ்மா XMR 210 ஃபேரிங் பைக்கின் காம்பேட் எடிசனை விற்பனைக்கு கொண்டு வருவதனை உறுதிசெய்யும் வகையில் டீசரை வெளியிட்டுள்ள நிலையில் என்னென்ன சிறப்புகளை கொண்டிருக்கின்றது என்பதனை அறிந்து கொள்ளலாம்.

குறிப்பாக எஞ்சின் பவர் மற்றும் டார்க் ஆகியவற்றில் எந்த மாற்றமும் இல்லாமல் தொடர்ந்து 210சிசி லிக்யூடு கூல்டு எஞ்சினை பெறுகின்ற கரீஸ்மா XMR  9250rpm-ல் 25.5 hp பவர் மற்றும் 7,250rpm-ல் 20.5 Nm டார்க் வெளிப்படுத்துகின்றது. இந்த மாடலில் 6 வேக கியர்பாக்ஸ் உடன் சிலிப்பர் அசிஸ்ட் கிளட்ச் பொருத்தப்பட்டுள்ளது.

காம்பேட் எடிசனின் முக்கிய வித்தியாசங்கள்களில் முன்புறத்தில் கோல்டன் நிறத்திலான அப்சைடு டவுன் ஃபோர்க் மற்றும் பின்புறத்தில் மோனோஷாக் சஸ்பென்ஷனை கொண்டு 17 அங்குல வீல் பெற்று டிஸ்க் பிரேக்குடன் டூயல் சேனல் ஏபிஎஸ் பெற்றதாக அமைந்துள்ளது. ஃபைட்டர் ஜெட் விமானங்களில் மேட் கிரே நிறத்தை கொண்டதாக அமைந்துள்ளது. டிஎஃப்டி கிளஸ்ட்டர் வழங்கப்பட்டு பல்வேறு கனெக்ட்டிவிட்டி சார்ந்த வசதிகளை கொண்டிருக்கின்றது.

காம்பேட் எடிசன் ஆனது முன்பாக ஜூம் 110 ஸ்கூட்டரில் வெளியிடப்பட்ட நிலையில், புதிதாக வரவுள்ள கரீஸ்மா XMR 210 காம்பேட் எடிசன் விலை ரூ.1.85 -1.88 லட்சத்தில் அமையலாம். அடுத்த சில வாரங்களில் விற்பனைக்கு எதிர்பார்க்கப்படுகின்றது.

Exit mobile version