ஹீரோ கரீஸ்மா XMR 210 பைக் சோதனை ஓட்ட படங்கள் வெளியானது

ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் மீண்டும் கரீஸ்மா பைக் மாடலை விற்பனைக்கு கரீஸ்மா XMR அல்லது கரீஸ்மா XMR 210 என்ற பெயரில் அறிமுகம் செய்ய உள்ளது. ஃபேரிங் செய்யப்பட்ட இந்த மாடல் விற்பனையில் உள்ள சுசூகி ஜிக்ஸெர் SF 250, பல்சர் ஆர்எஸ் 200 மற்றும் கேடிஎம் ஆர்சி200 போன்ற பைக்குகளை எதிர்கொள்ளும்.

தற்பொழுது விற்பனையில் ஃபேரிங் ஸ்டைல் மாடலாக எக்ஸ்ட்ரீம் 200S பைக்கிற்கு மாற்றாக புதிய 210cc லிக்யூடு கூல்டு என்ஜினை பெற உள்ள புதிய கரிஷ்மா 210 பைக் முதன்முறையாக சாலையில் சோதனை ஓட்டத்தில் ஈடுபடும் படங்கள் கசிந்துள்ளது.

Hero Karizma XMR

சமீபத்தில் எக்ஸ்ட்ரீம் 160R அல்லது எக்ஸ்ட்ரீம் 200R பைக்கின் சோதனை ஓட்ட படங்கள் வெளியாகியதை தொடர்ந்து இப்பொழுது கரீஸ்மா எக்ஸ்எம்ஆர் பைக்கின் சாலை சோதனையில் முழுமையாக மறைக்கப்பட்டு சோதனை செய்யப்பட்டு வருகின்றது.

விற்பனைக்கு வரவிருக்கும் புதிய க்ரீஸ்மா பைக்கில் 210cc லிக்யூடு கூல்டு என்ஜின் பொருத்தப்பட்டு அதிகபட்சமாக 25 Hp பவர் மற்றும் 35 Nm வரையிலான டார்க் வெளிப்படுத்துவதுடன், இதில் 6 வேக மேனுவல் கியர்பாக்ஸ் உடன் சிலிப்பர் கிளட்ச் அசிஸ்ட் கொடுக்கப்பட்டிருக்கும்.

முன்புறத்தில் டெலிஸ்கோபிக் ஃபோர்க், பின்புறத்தில் மோனோ ஷாக் அப்சார்பருடன் இருபக்க டயர்களிலும் டிஸ்க் பிரேக் கொடுக்கப்பட்டு டூயல் சேனல் ஏபிஎஸ் பெற்றிருக்கலாம்.

புதிய கரிஸ்மா 210 பைக்கில் எல்இடி ஹெட்லைட், எல்இடி இண்டிகேட்டர்களுடன் குறைந்த செட் கிளிப் ஆன் ஹேண்டில்பார் பெற்று டிஜிட்டல் கிஸ்ட்டருடன் முழுமையாக ஃபேரிங் பேனல்களுடன் நவீனத்துவமான பாடி கிராபிக்ஸ் பெற்றிருக்கலாம்.

புதிய ஹீரோ கரீஸ்மா XMR பைக்கின் எக்ஸ்ஷோரூம் விலை ₹ 1.50 லட்சத்தில் துவங்கலாம்.

 

image source motorbeam

Share