Automobile Tamilan

ஹீரோ கரீஸ்மா XMR vs போட்டியாளர்கள் ஆன்-ரோடு விலை, என்ஜின் ஒப்பீடு

200cc-250cc வரையிலான சந்தையில் உள்ள ஃபேரிங் ஸ்டைல் மாடல்களை எதிர்கொள்ளும் ஹீரோ மோட்டோகார்ப் கரீஸ்மா XMR பைக்கின் போட்டியாளர்களான யமஹா R15, சுசூகி ஜிக்ஸர் SF 250, ஜிக்ஸர் SF, பஜாஜ் பல்சர் RS 200, மற்றும் கேடிஎம் RC 200 ஆகிய மாடல்களுடன் எக்ஸ்ட்ரீம் 200S 4v ஆகியவற்றின்  தமிழ்நாட்டின் ஆன்-ரோடு விலை, என்ஜின் விபரம் அறிந்து கொள்ளலாம்.

ஃபேரிங் ஸ்டைலை பெற்றிருக்கின்ற சுசூகி ஜிக்ஸர் SF 250, ஜிக்ஸர் SF, எக்ஸ்ட்ரீம் 200S 4v மாடல்கள் ஏர் ஆயில் கூல்டு என்ஜினை பெற்றிருக்கின்றன. மற்ற போட்டியாளர்கள் லிக்யூடு கூல்டு என்ஜினை பெற்றுள்ளனர்.

Hero Karizma XMR vs rivals

லிக்யூடு கூல்டு சிலிப்பர் அசிஸ்ட் கிளட்ச் பெற்றதாக வந்துள்ள ஹீரோ கரீஸ்மா எக்ஸ்ம்ஆர் 210சிசி என்ஜின் 25.5 hp பவரை வழங்கும் நிலையில் நேரடியான போட்டியாளர்களை விட அதிகமாகவே உள்ளது. 250சிசி என்ஜின் பெற்ற ஜிக்ஸர் SF 1 hp கூடுதலாக இந்த பிரிவில் அதிக 26.5 hp பவரை வெளிப்படுத்துகின்றது. RC 200 மற்றும் பல்சர் RS 200 பைக்குகள் 1 hp வரை குறைவான பவரை வெளிப்படுத்துகின்றது.

R15 V4 மற்றும் ஜிக்ஸர் SF 155 மாடல்கள் நேரடியான போட்டியாளர் இல்லையென்றாலும் ஒப்பீடு செய்யப்பட்டுள்ளது. அதன் விபரம் முழுமையாக அட்டவனையில் உள்ளது.

தயாரிப்பாளர் என்ஜின் பவர், டார்க்
Hero Karizma XMR 210cc,  liquid cooled 25.5 bhp at 9,250 rpm

20.4 Nm at 7,250 rpm, 6 Speed Gearbox

Hero Xtreme 200S 4V 199.6cc, Air-oil cooled  18.9 bhp at 6250 rpm

10.4 Nm at 5000 rpm , 5 Speed Gearbox

Bajaj Pulsar RS200 199.5cc, Liquid-cooled  24.5 bhp at 9750 rpm

18.7 Nm at 8000 rpm, 6 Speed Gearbox

Suzuki Gixxer SF 155cc,  Air cooled 13.5 bhp at 8000 rpm

13.8 Nm at 6000 rpm, 5 Speed Gearbox

Suzuki Gixxer SF 250 249cc,  Air  oil cooled 26.5 bhp at 9300 rpm

22.2 Nm at 7,250 rpm, 5 Speed Gearbox

Yamaha R15V4/R15S/R15M 155cc, Liquid-cooled  18.4 bhp at 10000 rpm

14.2 Nm at 7500 rpm, 6 Speed Gearbox

KTM RC 200 199.5cc, liquid cooled  24.6 bhp at 10000 rpm

19.2 Nm at 8000 rpm, 6 Speed Gearbox

குறிப்பாக உள்ள அனைத்து போட்டியாளர்களுமே டெலிஸ்கோபிக் ஃபோர்க் மற்றும் மோனோஷாக் சஸ்பென்ஷனை பெறும் நிலையில், யமஹா R15 V4, கேடிஎம் RC200 என இரண்டும் அப்சைடு டவுன் ஃபோர்க்கினை கொண்டுள்ளது.

இருபக்க டயர்களிலும் டிஸ்க் பிரேக் கொடுக்கப்பட்டு, 300 மிமீ டிஸ்க் முன்புறத்தில் வழங்கப்பட்டுள்ள கரீஸ்மா பைக்கில் டூயல் சேனல் ஏபிஎஸ் உள்ளது.

Hero Karizma XMR on-road price in Tamil Nadu

ஹீரோ கரீஸ்மா XMR 210 பைக்கின் விலை ஒப்பீடு செய்தல் அட்டவனையில் காணலாம். (தமிழ்நாடு விலை பட்டியல்) வழங்கப்பட்டுள்ள ஆன்-ரோடு விலை தோராயமானது, இதில் கூடுதல் ஆக்செரீஸ், டீலர்களை பொறுத்து விலை மாறுபடும்.

தயாரிப்பாளர் விலை (எக்ஸ்-ஷோரூம்) ஆன்-ரோடு விலை
Hero Karizma XMR ₹ 1,72,900 ₹ 2,02,790
Hero Xtreme 200S 4V ₹ 1,45,600 ₹ 1,70,675
Bajaj Pulsar RS200 ₹ 1,72,550 ₹ 2,04,789
Suzuki Gixxer SF ₹ 1,41,337 – ₹ 1,50,135 ₹ 1,66,456 – ₹ 1,77,670
Suzuki Gixxer SF250 ₹ 1,96,336 – ₹ 2,09,736 ₹ 2,26,476 – ₹ 2,40,010
Yamaha R15 Series ₹ 1.65,939,–  ₹ 1,96,739 ₹ 1,99,560 – ₹ 2,33,705
KTM RC200 ₹ 2,14,688- ₹ 2,17,824 ₹ 2,45,018- ₹ 2,57,024

6 ஸ்பீடு கியர்பாக்ஸ், லிக்யூடு கூல்டு என்ஜின் ,டூயல் சேனல் ஏபிஎஸ் பெற்ற மாடல்களில் குறைந்த விலை கொண்ட ஹீரோ கரீஸ்மா XMR 210 போட்டியாளர்களுக்கு கடும் சவாலாக அமைந்துள்ளது. அடுத்த சில வாரங்களில் கரிஸ்மா விலை ரூ.10,000 உயர உள்ளது. விலை உயர்வுக்குப் பின்னரும் மிக சவாலாக அமைந்திருக்கும்.

Exit mobile version