Automobile Tamilan

ஹீரோ மேவ்ரிக் 440 பைக்கின் 5 முக்கிய சிறப்பு அம்சங்கள்

hero mavrick 440 blue

ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் முதல் பிரீமியம் பைக் ஹீரோ மேவ்ரிக் 440 மோட்டார்சைக்கிளில் இடம்பெற்றுள்ள 5 முக்கிய சிறப்பு அம்சங்களை தொகுத்து அறிந்து கொள்ளலாம்.

நடுத்தர மோட்டார்சைக்கிள் சந்தையில் இடம்பெற்றுள்ள ராயல் என்ஃபீல்டு முதல் பல்வேறு பைக்குகளுக்கு கடுமையான சவாலினை ஏற்படுத்தும் வகையில் ஹீரோ மற்றும் ஹார்-டேவிட்சன் கூட்டணி மூலம் உருவாக்கப்பட்ட X440 அடிப்படையில் மேவ்ரிக் தயாரிக்கப்பட்டுள்ளது.

ஹீரோ மேவ்ரிக் 440 டிசைன்

நவீனத்துவமான மாடர்ன் ரோட்ஸ்டெர் டிசைனை மையப்படுத்தி வடிவமைக்கப்பட்டுள்ள ஹீரோ மேவ்ரிக் 440 பைக்கில் வட்ட வடிவ எல்இடி புராஜெக்டர் விளக்குடன் H- வடிவ ரன்னிங் விளக்குகள், மற்றும் ஹெட்லைட் பகுதியை சுற்றியுள்ள கவர் மிக நேர்த்தியாக உள்ளது.

குமிழ் வடிவ பெட்ரோல் டேங்க் பெற்று டேங்கின் கீழ் பகுதியில் எக்ஸ்டென்ஷன் சேர்க்கப்பட்டு, ஒற்றை வடிவ இருக்கை, நேர்த்தியான பக்கவாட்டு தோற்றத்துடன் அமைந்துள்ளது.

வேரியண்ட் வாரியான வசதிகள் மற்றும் நிறங்கள்

பேஸ், மிட், டாப் என மூன்று விதமான வேரியண்டில் வந்துள்ள மேவ்ரிக் 440 மாடலில் ஏவியேட்டர் வெள்ளை நிறத்தில் ஸ்போக்டூ வீல் உள்ளது. அலாய் வீல் பெற்றுள்ள மிட் வேரியண்ட் மாடல் இரு வண்ண கலவையை பெற்ற ஃபியர்லெஸ் சிவப்பு, நீலம், இறுதியாக உள்ள டாப் வேரியண்டில் மெசின் ஃபினிஷ்டு என்ஜின், கனெக்ட்டிவ் வசதிகளை கொண்டு , டைமண்ட் கட் அலாய் வீல் பெற்று பேண்டம் கருப்பு மற்றும் என்கிமா கருப்பு என மொத்தமாக 5 விதமான நிறங்களை பெற்றுள்ளது.

மேவ்ரிக் என்ஜின்

ஹீரோ Torq-X என பெயரிடப்பட்டுள்ள என்ஜினை பெறுகின்ற மேவ்ரிக் பைக்கில் 440cc ஏர் ஆயில் கூல்டு ஒற்றை சிலிண்டர் என்ஜின் அதிகபட்சமாக 6000 RPM-ல் 27 bhp பவர் மற்றும் 4000rpm-ல் 36Nm டார்க் வெளிப்படுத்துகின்றது. இதில் 6 வேக கியர்பாக்ஸ் உடன் அசிஸ்ட் மற்றும் சிலிப்பர் கிளட்ச் உள்ளது.

வசதிகள்

மேவ்ரிக் 440 பைக்கின் முன்புறத்தில்  டெலிஸ்கோபிக் ஃபோர்க் மற்றும் பின்புறத்தில் ஹைட்ராலிக் ஷாக் அப்சார்பரை பெற்று 110/70 – 17 மற்றும் பின்புறத்தில் 150/60 – 17 டயர் கொண்டுள்ளது. டிஸ்க் பிரேக் 320mm மற்றும் பின்புறத்தில் 240mm டிஸ்க் பிரேக் கொண்டு டூயல் சேனல் ஏபிஎஸ் பெற்றுள்ளது.

நெக்ட்டிவ் எல்சிடி டிஸ்பிளே பெறுகின்ற மேவ்ரிக் 440 மாடலில் ஹீரோ கனெக்ட் வசதி மூலம் ப்ளூடூத் வாயிலாக ஸ்மார்ட்ஃபோன் ஒருங்கிணைத்தால் டர்ன்-பை-டர்ன் நேவிகேஷன்,  கியர் பொசிஷன் இன்டிகேட்டர், குறிப்பிட்ட எல்லையில் பயணிக்கும் ஜியோஃபென்ஸ், வாகன இருப்பிடம் கண்டறிதல், இருப்பிட பகிர்வு, வாகனத்தைக் கண்காணிக்கவும், சாலையோர உதவி சுமார் 35க்கு மேற்பட்ட வசதிகளை பெறுகின்றது.

போட்டியாளர்கள்

ஹார்லி-டேவிட்சன் X440, ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 350, ட்ரையம்ப் ஸ்பீட் 400 மற்றும் ஜாவா 350 உள்ளிட்ட மாடல்களை எதிர்கொள்ள உள்ள ஹீரோ மேவ்ரிக் 440 ஆனது இந்நிறுவனத்தின் பிரத்தியேகமான, ஹீரோ பிரீமியா டீலர்ஷிப்கள் மூலம் விற்பனை செய்யப்பட உள்ளது. இந்த பிரீமியா டீலர்கள் எண்ணிக்கை 3 ஆக உள்ள நிலையில் வரும் ஜூன் மாத முடிவுக்குள் 100 ஆக உயர்த்தப்பட உள்ளது.

ஹீரோ மேவ்ரிக் விலை ?

350cc-500cc இடைபட்ட பிரிவில் உள்ள பல்வேறு ரெட்ரோ ஸ்டைல் மாடல்களை எதிர்கொள்ளும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ள ஹீரோ மேவ்ரிக் 440 பைக்கின் ஆரம்ப விலை ரூ.2.10 லட்சம் முதல் துவங்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

வரும் பிப்ரவரி மாதம் விலை அறிவிக்கப்பட்டு புக்கிங் துவங்க உள்ள நிலையில் டெலிவரி 2024 ஏப்ரல் மாதம் முதல் மேற்கொள்ளப்பட உள்ளது.

Exit mobile version