பிரீமியம் பைக் சந்தையை கைபற்ற துடிக்கும் ஹீரோ மோட்டோகார்ப்

77924 hero

150சிசி க்கு குறைவான சந்தையில் முதன்மையான நிறுவனமாக விளங்குகின்ற ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம், 450 சிசி வரையிலான சந்தையில் பல்வேறு புதிய மோட்டார் சைக்கிள் மாடல்களை விற்பனைக்கு கொண்டு வரவுள்ளது.

150சிசி-450சிசி வரையிலான சந்தையில் பல்வேறு புதிய மாடல்களை அடுத்த சில மாதங்களில் விற்பனைக்கு கொண்டு வர ஹீரோ திட்டமிட்டுள்ளது. மேலும் அடுத்த மூன்று முதல் நான்கு ஆண்டுகளில் இந்தியாவின் பிரிமியம் பைக் சந்தையிலும் முதன்மையான நிறுவனமாக விளங்க முயற்சி மேற்கொண்டுள்ளதாக விற்பனை மற்றும் விற்பைக்கு பிந்தைய சேவை வழங்கும் பிரிவின் தலைவர் சஞ்சய் பான் குறிப்பிட்டுள்ளார்.

ஹீரோ மோட்டோகார்ப்

மே 1 ஆம் தேதி ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம், புதிய ஹீரோ எக்ஸ் வரிசை குடும்பத்தில், கடந்த ஆண்டு வெளியிடப்பட்ட எக்ஸ்ட்ரீம் 200ஆர் மாடலை தொடர்ந்து எக்ஸ்பல்ஸ் 200,எக்ஸ்பல்ஸ் 200T மற்றும் எக்ஸ்ட்ரீம் 200எஸ் என மொத்தம் தற்போது நான்கு மாடல்கள் விற்பனை செய்யப்படுகின்றது.

எக்ஸ்பல்ஸ் 200 அறிமுகத்தின் போது மணிகன்ட்ரோல் தளத்துக்கு ஹீரோ நிறுவன விற்பனை மற்றும் விற்பைக்கு பிந்தைய சேவை வழங்கும் பிரிவின் தலைவர் சஞ்சய் பான் அளித்த பேட்டியில், பிரீமியம் சந்தையில் முன்னணி வகிப்பதற்கு, ஹீரோ நிறுவனம் பெரிய என்ஜின் கொண்ட மோட்டார்சைக்கிள்களை விற்பனைக்கு கொண்டு வர திட்டமிட்டுள்ளது. மேலும் தொடர்ந்து (400-450சிசி வரையிலான) சந்தையில் புதிய பைக்குகளை உருவாக்க முதலீடு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

எனவே, தொடர்ந்து ஹீரோ நிறுவனம் பல்வேறு புதிய மோட்டார்சைக்கிள் மாடல்களை விற்பனைக்கு கொண்டு வருவது தற்போது உறுதியாகியுள்ளது.

Exit mobile version