Automobile Tamilan

ரூ.44,990 விலையில் விடா VX2 எலக்ட்ரிக் ஸ்கூட்டரை வாங்கலாமா..!

vida vx2 go and vx2 plus

ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் புதிய Vida VX2 மின்சார ஸ்கூட்டரின் அறிமுக சலுகையில் ரூ.44,490 க்கு BaaS (Battery-as-a-Service) திட்டத்தில் வாங்குபவர்களுக்கு நீட்டிக்கப்ப்ட்ட வாரண்டி, 70% குறைவாக பேட்டரி திறன் சென்றால் இலவசமாக பேட்டரியை மாற்றித் தரப்படும் என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

VIDA VX2 BaaS

குறிப்பாக, அறிமுகத்தின் பொழுது  VX2 BAAS திட்டத்தின் கீழ் ரூ.59,490 ஆக அறிவிக்கப்பட்ட நிலையில், ஒவ்வொரு கிமீ பயணித்தின் பொழுது 0.96 பைசா வசூலிக்கப்படும் என உறுதிப்படுத்தியது, தற்பொழுது தனது X சமூக ஊடக பக்கத்தில் ஒரு கிமீ பயணத்துக்கு ரூ.1.24 வசூலிக்கப்படும், ஆனால் வாகனத்தின் விலையை தற்பொழுது ரூ.44,990 ஆக குறைத்துள்ளது.

விடா VX2 பேட்டரிகளுக்கு 5 ஆண்டுகள் அல்லது 60,000 கிமீ நீட்டிக்கப்பட்ட உத்தரவாதத்தை வழங்குகிறது. மேலும், ஸ்கூட்டரின் பேட்டரி நிலை 70% க்கும் குறைவாகக் குறைந்தால், பேட்டரிகள் இலவசமாக மாற்றப்படும்.

இது தவிர, BMS (பேட்டரி மேலாண்மை அமைப்பு), கண்ட்ரோலர் போன்ற ஸ்கூட்டரின் அனைத்து முக்கிய பாகங்கள் உற்பத்தி குறைபாடுகளை ஏற்பட்டிருந்தால் 5 ஆண்டுகள் அல்லது 75,000 கிமீ எது முந்தையதோ அதற்குள் இலவச உத்தரவாதம் வழங்கப்படுகிறது.

மேலும், விடா பேட்டரியின் 67 % மதிப்பில் அதாவது ரூ.67,500 விலையில் திரும்ப வாங்கிக் கொள்ளும் திட்டத்தை ஹீரோ நிறுவனம், செயற்படுத்த உள்ளதால் பல சிறப்புகளுடன் கூடுதலாக விடா சார்ஜிங் நெட்வொர்கினை இலவசமாக BAAS திட்டத்தில் உள்ள வாடிக்கையாளர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம் என உறுதிப்படுத்தியுள்ளது.

மேலும், BaaS திட்டத்தின் கீழ் மின்சார ஸ்கூட்டரை வாங்குபவர்கள் ஆகஸ்ட் 31, 2025 அன்று அல்லது அதற்கு முன்பாக வாங்குபவர்களுக்கு மட்டுமே இந்த சலுகைகள் கிடைக்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

Offer price

VX2 Plus BaaS Plan explained

Plan 1 Plan 2 Plan 3
வருடம் 2 ஆண்டுகள் 3 ஆண்டுகள் 5 ஆண்டுகள்
மாதாந்திர கிமீ 2,400 கிமீ 1,600 கிமீ 800 கிமீ
மாதாந்திர கட்டணம் ரூ 2,160 ரூ 1,584 ரூ 1,128
ஒரு கி.மீ-க்கு செலவு ரூ 0.90 ரூ 0.99 ரூ 1.41

விஎக்ஸ்2 கோ பேட்டரி வாடகை திட்டம்

Plan 1 Plan 2
வருடம் 3 ஆண்டுகள் 5 ஆண்டுகள்
மாதாந்திர கிமீ 1200 கிமீ 750 கிமீ
மாதாந்திர கட்டணம் ரூ 1,488 ரூ 1,103
ஒரு கி.மீ-க்கு செலவு ரூ 1.24 ரூ 1.47

https://x.com/VidaDotWorld/status/1941162934757138579

Exit mobile version