Automobile Tamilan

ஹீரோ விடா VX2 மின்சார ஸ்கூட்டரின் டீசர் வெளியானது

hero vida vx2 teased

இந்தியாவின் முன்னணி இருசக்கர வாகன தயாரிப்பாளரான ஹீரோ மோட்டோகார்ப் (Hero Motocorp) கீழ் செயல்படுகின்ற விடா எலக்ட்ரிக் பிராண்டின் குறைந்த விலை மற்றும் குடும்ப பயன்பாடுகளுக்கு ஏற்ற VX2 ஸ்கூட்டர் விற்பனைக்கு ஜூலை 1ஆம் தேதி வெளியிடப்பட உள்ளதால் தொடர்ச்சியாக EVOOTER என்ற பெயரில் டீசர் வெளியிடப்பட்டு வருகின்றது.

ஏற்கனவே, நமது தளத்தில் விடா VX2 ஸ்கூட்டரின் புகைப்படங்களை நாம் முதன்முறையாக பகிர்ந்த நிலையில், இந்த மாடல் 2024 EICMA அரங்கில் காட்சிப்படுத்தப்பட்ட விடா ஜீ அடிப்படையிலான உற்பத்தி நிலை மாடலை விஎக்ஸ்2 வரிசையில்  VX2 Pro VX2, Plus, மற்றும் VX2 Go என மூன்று மாடல்கள் வரக்கூடும்.

ஏற்கனவே, சந்தையில் உள்ள வி2 ஸ்கூட்டரில் உள்ள பேட்டரியை பகிர்ந்த் கொள்ள உள்ள விஎக்ஸ் 2 மாடல் 2.2Kwh, 3.44Kwh, மற்றும் 3.94kwh என மூன்று விதமான பேட்டரியுடன் கூடுதலாக 4.44kwh பேட்டரியும் பெறக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

டெலிஸ்கோபிக் ஃபோர்க் மற்றும் மோனோ ஷாக் சஸ்பென்ஷன் பின்புறத்தில் கொடுக்கப்பட்டு, 12 அங்குல அலாய் வீல் உடஉ முன்புறத்தில் டிஸ்க் மற்றும் பின்புறத்தில் டிரம் பெற்றுள்ள ஸ்கூட்டரில் 90/90-12 மற்றும் 90/100-12 ட்யூப்லெஸ் டயருடன் ஒருங்கிணைந்த பிரேக்கிங் சிஸ்டத்தை பெறுகின்றது.

விற்பனைக்கு வரவிருக்கும் விஎக்ஸ்2 விலை ரூ.75,000 முதல் ரூ.1.50 லட்சத்துக்குள் மாறுபட்ட வேரியண்டுகளில் கிடைக்கலாம்.

Exit mobile version