Automobile Tamilan

ஜூலை 1 ஆம் ஹீரோ விடா VX2 எலக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனைக்கு வெளியாகிறது.!

hero vida z scooter

ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் விடா (Vida) எலக்ட்ரிக் பிராண்டின் கீழ் புதிய விடா VX2 எலக்ட்ரிக் ஸ்கூட்டர் வரிசையில்  VX2 Pro VX2, Plus, VX2 Go என மொத்தமாக 3 மாடல்களை ஜூலை 1 , 2025ல் விற்பனைக்கு வெளியிடப்பட உள்ள நிலையில், இந்த மாடல் ஏற்கனவே காட்சிப்படுத்திய விடா ஜீ அல்லது புதிய குறைந்த விலை ஸ்கூட்டர் மாடலாக இருக்குமா என்பது வரும் நாட்களில் தெரியவரும்.

அனேகமாக வரவுள்ள VX2 வரிசை ஸ்கூட்டரின் பேட்டரி ஆப்ஷனை பொறுத்தவரை 2.2kwh முதல் 4.4kwh வரையிலான திறன் பெற்ற மாறுபட்ட பேட்டரி ஆப்ஷனை பெற்றதாக கிடைக்க உள்ளது.

இந்த ஸ்கூட்டர் மாடலில் 7 அங்குல டிஎஃப்டி கன்சோல், வாகனத்தின் ஆரோக்கியத்தைக் கண்காணிக்கும் திறன், திருட்டு எச்சரிக்கைகள், ஜியோஃபென்சிங் மற்றும் வாகன அசையாமை போன்ற அம்சங்கள் இருக்கும். ஸ்கூட்டருக்கு OTA (ஒவர்-தி-ஏர்) மூலம் புதுப்பிப்புகளும் கிடைக்கும், இது உரிமையாளர்கள் ஷோரூமிற்குச் செல்லாமல் தங்கள் ஸ்கூட்டர்களைப் புதுப்பிக்க முடியும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

வரும் ஜூலை 1 ஆம் தேதி விற்பனைக்கு வரவுள்ள விடா விஎக்ஸ்2 வரிசை ஆரம்ப விலை ரூ.70,000 முதல் துவங்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Exit mobile version