Automobile Tamilan

BAAS திட்டத்தில் ரூ.50,000 விலையில் ஹீரோ விடா VX2 விற்பனைக்கு வருகின்றதா.?

vida vx2 teaser

சமீபத்தில் ஹீரோ விடா வெளியிட்டுள்ள அறிக்கையில் Battery-as -a-Service என்ற முறையின்படி பேட்டரிக்கான வாடகையை மட்டும் செலுத்தி வாகனத்தை பயன்படுத்திக் கொள்ளும் முறையை முதன்முறையாக விடா VX2 மூலம் அறிமுகம் செய்ய உள்ளதை உறுதி செய்துள்ளது.

இதன் காரணமாக ஸ்கூட்டரின் விலைக்கு மட்டும் கட்டணத்தை செலுத்தினால் போதும் எனவே ஸ்கூட்டர் விலை மலிவாக கிடைக்கும் அதே நேரத்தில் பேட்டரியை பயன்படுத்தும் பொழுது ஒரு கிலோமீட்டருக்கு இவ்வளவு ரூபாய் சார்ஜ் செய்யப்படும் என இந்நிறுவனம் ஜூலை 1ஆம் தேதி அறிவிக்க உள்ளது.

இது போன்ற திட்டத்தை ஏற்கனவே இந்தியாவில் கார்களுக்கு எம்ஜி மோட்டார் நிறுவனம் செயல்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கதாகும்.

மேலும் சமீபத்தில் இந்நிறுவனம் வெளியிட்டுள்ள டீசரின் மூலம் விடா VX2 பேஸ் வேரியண்ட் இருபக்க டயரிலும் டிரம் பிரேக் ஆப்ஷனை பெறக்கூடும் என உறுதிப்படுத்தியுள்ளது. சிறிய அளவிலான கிளஸ்ட்டர், வழக்கமான கீ என பலவற்றை பெற்று மிக குறைந்த விலையில் வரக்கூடும் இதனால் சந்தையில் மிகப்பெரிய தாக்கத்தை ஹீரோ மோட்டோகார்ப் ஏற்படுத்த உள்ளது.

அதேநேரத்தில் டீலர்களின் எண்ணிக்கை ஹீரோ விரிவுப்படுத்த வாய்ப்புள்ளதால் விற்பனை எண்ணிக்கை உயரும் வாய்ப்புள்ளது. பேட்டரி ஒரு சேவையாக வழங்கப்படும் திட்டத்தை முன்னணி நகரங்களில் மட்டும் செயல்படுத்த வாய்ப்புள்ளது.

குறிப்பாக, தற்பொழுது இந்நிறுவனம், இந்தியாவின் 100 நகரங்களில் 3,600க்கும் மேற்பட்ட வேகமான சார்ஜிங் நிலையங்கள் மற்றும் 500க்கும் மேற்பட்ட சேவை மையங்கள் கொண்டிருப்பதனால், இந்த நகரங்களில் மட்டும் வாடிக்கையாளர்கள் தங்கள் தினசரி அல்லது மாதாந்திர தேவைகளின் அடிப்படையில் பல்வேறு சந்தா திட்டங்களிலிருந்து பெற வாய்ப்புள்ளது, மற்ற நகரங்களில் முழுமையான கட்டணத்தை செலுத்தி வாங்கிக் கொள்ளும் வகையில் விஎக்ஸ் 2 ஸ்கூட்டர் கிடைக்கலாம்.

Exit mobile version