Automobile Tamilan

ஹீரோ எக்ஸ்பல்ஸ் 200, எக்ஸ்பல்ஸ் 200T பைக் முன்பதிவு துவங்கியது

0be4b hero xpulse 200 bikeமே 1 ஆம் தேதி விற்பனைக்கு வரவுள்ள அட்வென்ச்சர் ரக ஹீரோ எக்ஸ்பல்ஸ் 200 மற்றும் டூரிங் ரக ஹீரோ எக்ஸ்பல்ஸ் 200T பைக்கிற்கான முன்பதிவு பல்வேறு டீலர்களில் தொடங்கப்பட்டுள்ளது. பைக்கிற்கான முன்பதிவு கட்டணமாக ரூ.5000 செலுத்தலாம் என குறிப்பிடப்படுகின்றது.

எக்ஸ்ட்ரீம் 200ஆர் பைக்கின் அடிப்படையில் வடிவமைக்கப்பட்ட மாடலாக ஹீரோ எக்ஸ்பல்ஸ் வரிசை மாடல்கள் விளங்க உள்ளன. இந்த பைக்கில் 200சிசி என்ஜின் பொருத்தப்பட்டிருக்கின்றது.

ஹீரோ எக்ஸ்பல்ஸ் 200 சிறப்புகள்

ஃப்யூவல் இன்ஜெக்‌ஷன் கொண்டிருப்பதனால் பவர் அதிகரிக்கப்பட்டிருக்கும் வாய்ப்புகள் உள்ளது. அதிகபட்சமாக 18.4 ps பவர் மற்றும்  17.1 Nm  டார்க் திறனை கொண்டதாக விளங்கும். இதில் 5 வேக மேனுவல் கியர்பாக்ஸ் இடம்பெற்றிருக்கும்.

190 மிமீ பயணிக்கும் சஸ்பென்ஷன் , பின்புறத்தில் வழங்கப்படுள்ள ஒற்றை ஷாக் அப்சார்பர் அதிகபட்சமாக 170 மிமீ பயணிக்கும், இந்த பைக்கின் கிரவுண்ட் கிளியரன்ஸ் 200 மிமீ கொண்டிருப்பதுடன் சிங்கிள் சேனல் ஏபிஎஸ், எல்இடி ஹைட்லைட் கொண்டதாக இருக்கலாம்.

ரூ.1 லட்சம் முதல் ரூ. 1.30 லட்சத்துக்கும் குறைவான விலையில் ஹீரோவின் அட்வென்ச்சர் பைக் எக்ஸ்பல்ஸ் 200 மற்றும் டூரிங் ரக எக்ஸ்பல்ஸ் 200டி விளங்கும் என எதிர்பார்க்கப்படுகின்ற நிலையில் மேலதிக விபரங்கள் நாளை விற்பனைக்கு வரும்போது வெளியாகும்.

 

 

Exit mobile version